‘பாஜக ஆட்சியில் மாட்டிறைச்சி ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பு’
புதுதில்லி, மார்ச் 25- பாஜக ஆட்சியில் மாட்டுக்கறி ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அசுர வேகத்தில் அதிகரித்து வருவதை அரசாங்கமே உறுதிப்படுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை எம்.பி ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ ஜிதின் பிரசாதா அளித்த பதிலில் இருந்து இந்த உண்மை தெரிய வந்துள்ளது. பாஜக - ஆர்எஸ்எஸ் இன் ஆதரவு அமைப்புகளான கௌ ரக்க்ஷா உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் “மாட்டு இறைச்சி” (Beef) வைத்திருப்பதாக கூறி இஸ்லாமிய தலித் மக்களை அடித்து படுகொலை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் மாட்டுக்கறி ஏற்றுமதி ஆண்டு தோறும் அதிகரிப்பதும் நடந்து வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சியின் அளவு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 37,560 கோடி ரூபாய் வருவாய் மத்திய வர்த்தக அமைச்சகம் தாக்கல் செய்துள்ள தரவுகளின்படி, கடந்த 2020-21 நிதியாண்டில் 30,273 கோடி ரூபாயாக இருந்த இறைச்சி ஏற்றுமதி வருவாய், 2024-25 நிதியாண்டில் 39,053 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு களில் மட்டும் இந்தியாவின் இறைச்சி ஏற்றுமதி வருவாய் சுமார் 29% வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் அந்த பதிலில் இந்தியா வில் பசு மற்றும் காளை இறைச்சி (Beef) ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேசச் சந்தையில் “Carabeef” என்று அழைக்கப்படும் எருமை இறைச்சி ஏற்று மதியில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த இறைச்சியில் 98% க்கும் மேல் (சுமார் 4,060 மில்லி யன் டாலர்) எருமை இறைச்சி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 61 லட்சம் மெட்ரிக் டன் எருமை இறைச்சி இந்தியாவிலிருந்து உலக நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மாநில வாரியான தரவுகளை மறுக்கும் அரசு மாநில வாரியாக இறைச்சி ஏற்று மதி செய்யப்படும் புள்ளி விவரங்கள் கேட்கப்பட்ட நிலையில் அந்த விவ ரத்தை அரசு வெளியிட மறுத்துள்ளது. “மாநில வாரியான தரவுகள் சரிபார்க் கப்படாததால் அவற்றை பராமரிக்க வில்லை” என்று அமைச்சர் கூறி யுள்ளார்.
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து அதிக இறைச்சி ஏற்றுமதி ஆவது சில செய்திகள் வெளியிடும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்தாலும், அரசியல் காரணங்க ளுக்காக இந்தத் தரவுகளை அதிகாரப் ்பூர்வமாக வெளியிடாமல் பாஜக அரசு தவிர்க்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி (GST) மூலம் ஒவ்வொரு பொரு ளின் விவரங்களையும் கண்கா ணிக்கும் நிலைமை உள்ள சூழலில், “மாநில வாரியான தரவுகள் இல்லை” என்று அரசு கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை என விமர்ச னங்கள் எழுந்துள்ளன.
