ரூ. 100 கோடியில் நவீன சுற்றுலா கட்டமைப்பு வசதிகள்!
அமைச்சர் ராஜேந்திரன் அறிவிப்பு
உள்ளூர் சுற்றுலா பயணிகள் வரு கையில், தமிழ்நாடு 2-ஆம் இடம் இடத்தில் உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்று லாத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அவற்றுக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரன், “வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத் துறைகளில் சுற்றுலாவும் ஒன்றாகும். வர்த்தகம், வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றில் சுற்று லாத்துறை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது” என்று தெரி வித்தார். “சுற்றுலாப் பயணிகளின் வருகை தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் 30.80 கோடி சுற்றுலா பயணி கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள னர்” என்றும் குறிப்பிட்டார். “தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், அரியலூரில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில், நீலகிரி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (இயற்கை பிரிவு) ஆகியவை யுனெஸ்கோ உலக பாரம் பரிய தளங்களில் இடம்பிடித்திருக் கின்றன. தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்கு தல், நாட்டிற்கு அந்நிய செலாவணி வரு வாயை அதிகரிப்பது, தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாட்டில் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உருவாக்கு வதும் சுற்றுலாத்துறையின் குறிக்கோள்” என்றும் அமைச்சர் ராஜேந்திரன் கூறினார். பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், “தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு நவீன சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் படும். அதன்படி மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி, கன்னியாகுமரியில் ரூ. 20 கோடி, திருச்செந்தூரில் ரூ. 30 கோடி, நாகப் பட்டினம் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் ஆகிய இடங்களை மேம்படுத்த ரூ. 20 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு திட்டப்பணி கள் செயல்படுத்தப்படும்” என்றார்.
பைக்காரா நீர்வீழ்ச்சி
“நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் பைக்காரா படகு இல்லம் ஆகியவற்றில் வாகன நெருக்கடியைக் சீரமைக்கும் வகையில் ரூ. 20 கோடி செலவில் மேம்ப டுத்தப்படும். அதேபோல், ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி சுற்றுலா தலங்க ளில் பூங்காக்கள், உணவுக் கூடும், நடைபாதை மற்றும் தகவல் மையம் ஏற்படுத்தப்படும்.
சுற்றுலா தலமாகிறது சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத் தும் வகையில் பூங்கா, அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் இதர வசதிகள் ரூ. 10 கோடியில் செய்து கொடுக்கப்படும்” என்றும் அமைச்சர் அறிவித்தார்.
சுற்றுச்சூழல் சுற்றுலா
“கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வ ராயன் மலை பகுதி, கோமுகி அணை, மணிமுக்தா அணை மற்றும் சேலம் மாவட்டம் கருமந்துறை பழப்பண்ணை ஏரி ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 10 கோடியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட் டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான பூம்புகாரில் கூடுதல் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கி சிறந்த சுற்றுலா உட்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும்.
வீராணம் - பிச்சாவரம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரா ணம் ஏரி மற்றும் பிச்சாவரம் பகுதிகளில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப் படுகிறது. திருப்பூர் அமராவதி, கோயம்புத்தூர் ஆழியாறு, ஈரோடு பவானிசாகர், சேலம் மேட்டூர், தேனி வைகை ஆகிய அணைப் பகுதியில் சுற்றுலா தலங்களுக்கு உரிய உட்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ரூ. 2 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்” என்றும் அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.