து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு
விழுப்புரம், நவ.11- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்துத் துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள், மாவட்டப் பதிவாளர்கள் பணித்திறன் ஆய்வு மற்றும் கடலூர் மண்டலப் பதிவுத்துறை அலுவலர்கள் பணி சீராய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11, 2025) அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வணிக வரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் (முத்திரை மற்றும் பதிவு) சுதா மல்யா, கூடுதல் பதிவுத்துறைத் தலைவர் (சட்டம்) ஜனார்த்தனன், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
