ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களை முடக்கும் மெட்டா!
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் தளங்களில், ஆப்பிள் நுண்ணறிவு கொண்டு செயல்படும் அம்சங்களை மெட்டா நிறுவனம் முடக்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனம், அதன் ஐஓஎஸ் 18.1 இயங்குதளத்தில் ஆப்பிள் நுண்ணறிவு (Apple Intelligence) திறன் கொண்டு செயல்படும் பல அம்சங்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இதன் மூலம் உரையை (Text) வடிவமைத்தல், திருத்துதல் மற்றும் சுருக்குதல் ஆகியவற்றை செய்யலாம். இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகளில், மெட்டா ஏஐ திறன் கொண்ட செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், ஆப்பிள் நுண்ணறிவில் இயங்கும் எழுதும் கருவி (Apple Writing Tools) செயல்பாடுகளை முடக்கியுள்ளது. இதனால் ஆப்பிள் மொபைல்களில், ஆப்பிள் நுண்ணறிவு மூலம் உரையை (Text) வடிவமைத்தல், திருத்துதல் மற்றும் சுருக்குதல் போன்ற அம்சங்கள் செயல்படாது. இதற்கு பதிலாக மெட்டா நிறுவனம், அதன் ஏஐ கருவிகளை பயன்படுத்த ஊக்குவிக்கிறது
வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர் பேக்கை பகிரும் வசதி அறிமுகம்!
பயனர்கள் தங்கள் சொந்த ஸ்டிக்கர் பேக்கை உருவாக்கி அவற்றை பகிரும் வகையில் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் அவர்கள் உருவாக்கிய ஸ்டிக்கர்களை பல கோப்புறைகளாக (Folders) ஒழுங்கமைத்து முழு பேக்கையும், தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஏற்கனவே, ஸ்டிக்கர்களை தனித்தனியாக உருவாக்கி பகிரும் அம்சம் வாட்ஸ்அப்பில் இருந்த நிலையில், தற்போது எளிய முறையில் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்களை உருவாக்கவும், அதனை முழு பேக்காக பகிரவும் இந்த அம்சம் அனுமதிக்கிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டி லும் கிடைக்கிறது. மேலும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு சென்று ஸ்டிக்கர் உருவாக்கும் சிரமத்தை நீக்குகிறது.
ஸ்டிக்கர் பேக்கை உருவாக்குவது எப்படி?
1. முதலில், வாட்ஸ்அப் சாட்டில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷனுக்கு செல்லவும். 2. அதன் பிறகு, ‘Pen’ ஐகானை கிளிக் செய்து.நீங்கள் சேர்க்க விரும்பும் ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து, அந்த பேக்கிற்கு பொருத்தமான பெயரை வைத்து சேமித்துக் கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர் பேக்கை, அருகிலுள்ள மூன்று புள்ளி களை, எவ்வளவு ஸ்டிக்கரை வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் அனுப்பிக் கொள்ளலாம்.
இந்த போன்களில் ஆண்ட்ராய்டு 15 வெர்ஷனை அப்டேட் செய்ய முடியாது!
இனி, 16 ஜிபி மற்றும் அதற்கு குறை வான ஸ்டோரேஜை கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஆண்ட் ராய்டு 15 வெர்ஷன் ஓஎஸ்-ஐ அப்டேட் செய்ய முடியாது. 32 ஜிபிக்கும் குறைவான ஸ்டோரே ஜை (Storage) கொண்ட ஸ்மார்ட்போன் களில் உள்ள ஆண்ட்ராய்டு 15 வெர்ஷன் ஓஎஸ்-ஐ அப்டேட் செய்ய முடியாது என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள் ளது. கூடுதலாக, ஸ்மார்ட்போன் ஸ்டோ ரேஜில் குறைந்தது 75 சதவிகிதம், தரவு கள் பகிர்வுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தரவுகள் பகிர்வில்தான், செயலிகள், கோப்புகள் மற்றும் Settings ஆகியவை சேமிக்கப்படுகின்றன. எனவே, ஆண்ட் ராய்டு 15 அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷ னை பயன்படுத்த, 32 ஜிபி மற்றும் அதற்கு மேற்பட்ட ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் கட்டாயத்திற்கு பயனர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.