ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025
ஜெர்மனி ஹாட்ரிக் வெற்றி
21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4ஆம் நாளான திங்களன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி - அயர்லாந்து (குரூப் ஏ : மதுரை - ரேஸ்கோர்ஸ்) அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. தென் ஆப்பிரிக்கா அபாரம் இந்த ஆட்டத்தை தொடர்ந்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 26ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - கனடா அணிகள் (குரூப் ஏ) பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம், நியூசிலாந்து வீரர்கள் முதலிடம் 26ஆவது லீக் ஆட்டத்தின் முடிவில், தனிநபர் பிரிவில் அதிக கோல்கள் அடித்த வீரர் பட்டியலில் வங்கதேச வீரர் அமிரூல் இஸ்லாம், நியூசிலாந்து வீரர் ஜான்டி எல்ம்ஸ் ஆகியோர் 6 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.
இதுவரை காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் 4ஆம் நாளான திங்களன்று மாலை 6 மணி நிலவரப்படி இந்தியா, ஜெர்மனி, அர்ஜெண்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
கம்பீர் பயிற்சியாளராக தொடருவது இந்திய அணிக்கு நல்லதல்ல தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் எச்சரிக்கை
கம்பீர் உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் அவர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல என தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய அணியின் டெஸ்ட் தோல்வி தர்மசங்கடமானதும், கடின மானதும் ஆகும். தலைமையைப் பொறுத்தவரை கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல. இப்படிக் கூறும்போது, திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வ தாக ஆகாது. சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். தென் ஆப்பிரிக்க அணியையே எடுத்துக் கொள்ளுங் கள். தற்போதைய பயிற்சியாளரான சுக்ரியுடன் நான் பணி யாற்றியதில்லை. கம்பீர், ரியான் டென்டஸ்கேட், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை. வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது. ஆனால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிவார். முன்னாள் வீரர்களின் அனுபவம் நமக்கு உதவும், சில வீரர்கள் அத னால் சவுகரியமாக உணர்வார்கள். அது அவர்களுக்கு உத்வேகமாகவும் இருக்கும். ஆனால் மற்ற சிலருக்கு அது உத்வேகமாக இருக்காது. எப்படியிருந்தாலும் உணர்ச்சிவசப்படும் நபர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
