tamilnadu

உப்புக் கரித்து வரும் தாமிபரணி குடிநீர் நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்

உப்புக் கரித்து வரும் தாமிபரணி குடிநீர் நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்

விருதுநகர், டிச.31- விருதுநகர் நகராட்சியில் சாதா ரண மற்றும் அவசரக் கூட்டம் நகர் மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் தனலட்சுமி, பொறியாளர் பிரபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவா தம் வருமாறு: தங்களது பகுதியில் குடிநீரு டன் கழிவுநீரும் சேர்ந்து வருவதாக உறுப்பினர்கள் கலையரசன், ராமச்சந்திரன், ரம்யா, ராஜ்குமார் ஆகியோர் புகார் தெரிவித்தனர். பாதாளச் சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனம் தற்போது வந்து விட்டது. ஒவ்வொரு பகுதியாக அடைப்புகள் நீக்கப்பட்டு வரு கிறது. எனவே, விரைவில் பிரச் சனை சரி செய்யப்படும் என தலை வர் பதிலளித்தார். கடந்த 15 தினங்களாக தாமிர பரணிக் குடிநீர் மிகுந்த உப்புக் கரித்து வருகிறது. போர்வெல் தண்  ணீரை விட மோசமாக உள்ளது.  பொதுமக்கள் பருக முடியவில்லை யென உறுப்பினர்கள் ஜெயக் குமார், முத்துலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர். அப்போது பேசிய பொறியா ளர், நேரில் ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்றார். பர்மா பங்க் கடை அமைக்க மாற்று இடம் வழங்கிடும் தீர்மானம்  வந்த போது, பர்மா அகதிகளுக் காக வழங்கப்பட்டது தான் அக்கடை கள். எனவே, இத் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். எஞ்சிய  கடைகளை ஆய்வு செய்து மன்றத் தில் பொருள் கொண்டு வந்து நட வடிக்கை எடுக்க வேண்டுமென பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்ததையடுத்து அத்தீர்மா னம் ரத்து செய்யப்பட்டது. சமுதாயக் கூடங்களை ஒப்பந்  தம் விடவும். பொது மக்களிடம் குறைந்த வாடகை பெறவும், பரா மரிப்பு பணியை ஒப்பந்தகாரரே செய்து கொள்ள வேண்டுமெனவும் தலைவர் தெரிவித்தார். இதற்கு பெரும்பாலான உறுப் பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். சொத்து வரி பெயர் மாற்றம், குத்தகை, வாடகை இனங்கள் புதுப்பிக்கும் தொகையை உயர்த்து வது குறித்த தீர்மானம் வந்த போது  அதிமுக உறுப்பினர்கள் வெங்க டேஷ், சரவணன், அமுமுக உறுப்பி னர் ராமச்சந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பழுதடைந்த சாலைகளை பரா மரிப்பு செய்வதில்லை. ஒரு குறிப்  பிட்ட பகுதியில் மட்டும் மீண்டும்,  மீண்டும் பராமரிப்பு செய்யப்படுகி றது என உறுப்பினர் சுல்தான் அலா வுதீன் புகார் தெரிவித்தார். தங்களது வார்டு பகுதியை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் பதில் கூறினார். தெரு நாய்கள் பெருகி விட்ட தாகவும், அதை குறைத்திட உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென வும் உறுப்பினர்கள் மதியழகன், ரம்யா, ராமலட்சுமி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த சுகாதார ஆய்வாளர்கள் நகரில் 300க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கு அமைத்தவுடன் கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். பழுதான மின் மோட்டார்களை  உடனுக்குடன் மாற்றிட தேவை யான உதிரி மோட்டார்களை கை வசம் வைத்திருக்க வேண்டும் என உறுப்பினர் ஆறுமுகம் கோரி க்கை விடுத்தார். உடனடியாக நட வடிக்கை எடுக் கப்படும் என தலை வர் பதிலளித்தார். தங்களது பகுதியில் உள்ள ஸ்டோக் பம்புகளுக்கு உதிரி பாகங்  கள் கிடைப்பதில்லை. எனவே, அதனை கம்ப்ரசர் மோட்டராக மாற்றிட வேண்டுமென உறுப்பி னர்கள் ஜெயக்குமார், முத்துலட் சுமி, கலையரசன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பேசிய தலை வர், ஒரே நேரத்தில் அனைத்தை யும் மாற்றிட போதுமான நிதி இல்லை. எனவே, ஒவ்வொரு வார்  டாக மாற்றித் தரப்படும் என உறுதி யளித்தார். இவ்வாறாக விவாதம் நடை பெற்றது. மொத்தமுள்ள 47 தீர்மா னங்களில் இரு தீர்மானங்கள் ரத்து  செய்யப்பட்டன.