சாதி, சடங்கு மறுப்புத் திருமணம்
கள்ளக்குறிச்சி, டிச.31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர்பேட்டை நகரக்குழு அலு வலகத்தில் சாதி மறுப்பு மற்றும் சடங்கு மறுப்புத் திருமணம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வி. கலைமணி மற்றும் மதுரையைச் சேர்ந்த ஆர். பவானி ஆகியோருக்கு, கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் தலைமையில் இந்தத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மணமகனின் தாயார் முனியம்மாள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே. பழனி, ஜெ. ஜெயகுமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். ஆறுமுகம், பி. ஸ்டாலின், டி.எஸ். மோகன், வி. சாமிநாதன், வேலா. பால கிருஷ்ணன், பி.சேகர், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் இ. சதீஷ்குமார், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜே. டார்வின், உளுந்தூர்பேட்டை நகரக்குழு உறுப்பினர்கள் எம். ராஜேந்திரன், வி. சந்திரா, தீபன்ராஜ், சின்னராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
