ராணுவ சீருடைக்கு நியாயமான பீஸ் ரேட் கேட்டு ஆவடி ஓசிஎப் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அம்பத்தூர், டிச. 31- ராணுவ சீருடைக்கு நியாயமான தையல்கூலி கேட்டு ஆவடி ஓசிஎப் தொழி லாளர்கள் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார், தொமுச பொதுச்செயலாளர் ஏ.முகமது மீரா தலைமையில் புதனன்று (டிச. 30) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஸ்ரீகுமார் கூறுகையில், பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை ஒன்றிய அரசு பொதுத்துறை நிறு வனங்களாக மாற்றிய பிறகு, ராணு வத்திற்கு தேவையான சீருடைகள், குண்டு துளைக்காத ஆடைகள் ஆகியவற்றை ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை (ஓசிஎப்) உட்பட இந்தியாவில் உள்ள 4 ராணுவ ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை கள் தனியாரோடு போட்டியிட்டுத்தான் பணிகளைப் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாகப் போதுமான பணி ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றன. பாதுகாப்பு அமைச்சரின் தலையீட்டிற்குப் பிறகு, ராணுவம் நேரடியாகப் பணிகளை வழங்க உத்தரவிட்டது. சீருடைகளைத் தைப்பதற்கான நேரத்தை நிர்வாகம் சரியாக நிர்ணயம் செய்யாததால், ஊழியர்கள் 8 மணி நேரம் உழைத்தும் அடிப்படை ஊதியத்தைக் கூடப் பெற முடியாத நிலை உள்ளது. நியாயமான பீஸ்ரேட் நிர்ணயம் செய்யக் கோரி கடந்த ஓராண்டாகத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் பீஸ் ரேட் நிர்ணயம் செய்யப்படவில்லை. 2025ஆம் ஆண்டு நிறைவுறும் தரு வாயில் அனைத்துப் பகுதி ஊழியர்களும் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நிர்வாகம் உடனடியாக நியாயமான பீஸ் ரேட் நிர்ணயம் செய்யாவிட்டால், அடுத்தகட்டமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நோக்கிச் செல்வோம் என்று அவர் கூறினார்.
