tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி  மின்மாற்றியைச் சூழ்ந்திருந்த புதர்கள் அகற்றம்

தீக்கதிர் செய்தி எதிரொலி  மின்மாற்றியைச் சூழ்ந்திருந்த புதர்கள் அகற்றம்

விழுப்புரம், டிச.31-  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் உள்ள பி-ஏரிக்கரை பகுதியில், திண்டிவனம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையிலிருந்து பீரங்கிமேடு செல்லும் வழியில் 25 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றி ஒன்று அமைந்துள்ளது. இந்த மின்மாற்றியைச் சுற்றிலும் மரம் மற்றும் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்து மின் கம்பி  களைத் தொட்ட வண்ணம் இருந்தன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதனை உடனடி யாகச் சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த செய்தி ‘தீக்கதிர்’ நாளிதழில் புதன்கிழமை வெளியானது. செய்தியின் எதிரொலியாக, மின்வாரிய அதி காரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின்மாற்றி யைச் சுற்றிலும் வளர்ந்திருந்த புதர்களை அகற்றினர். உரிய நேரத்தில் செய்தியை வெளியிட்டுத் தீர்வு காண உதவிய தீக்கதிருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.