tamilnadu

img

நூற்பாலைகளில் இருந்து விசைத்தறிகளுக்கு விநியோகிக்கப்படும் நூலின் விலை உயர்வு

நூற்பாலைகளில் இருந்து விசைத்தறிகளுக்கு விநியோகிக்கப்படும் நூலின் விலை உயர்வு

கோவை, டிச. 30- திறந்தநிலை (பாரம் பரிய முறையில் நூலைச் சுற்றிச் சுற்றித் தயாரிப்பது) நூற்பாலைகளில் இருந்து விசைத்தறிகளுக்கு விநி யோகிக்கப்படும் நூலின் விலை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட தொடர்ச்சியான தேவையே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும். கடந்த வாரத்தில் கிலோ 137 ரூபாயாக இருந்த நூல்  விலை, தற்போது 142 ரூபா யாக உயர்ந்துள்ளது. இருப்பினும், கழிவுப் பஞ் சின் விலை மாறாமல் இருப்ப தால், நூற்பாலைகளில் இருந்து அதைக் கொள் முதல் செய்வதை திறந்த நிலை ஆலைகள் நிறுத்தி வைத்துள்ளன. தங்களி டம் கையிருப்பில் உள்ள கழிவுப் பஞ்சை  வைத்து உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், நூற்பாலைகளிடம் இருந்து புதிய கொள்முதல் செய்யவில்லை என்றும் திறந்தநிலை ஆலை உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர். 600 ஆலைகள் கடந்த மூன்று மாதங் களில் நூற்பாலைகளிடம் இருந்து வாங்கப்படும் கழி வுப் பஞ்சு விலை கிலோ வுக்கு 13 ரூபாய் உயர்ந்த தால், ஆலைகளை இயக்க முடியவில்லை எனக் கூறி திறந்தநிலை ஆலைகள் உற்பத்தியை 50% அளவில் குறைத்தன. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 600 திறந்த நிலை ஆலைகள் டிசம்பர் 21 முதல் உற்பத்தி நிறுத்தத் தை அறிவித்தன. மறுசுழற்சி ஜவுளி கூட்ட மைப்பின் தலைவர் எம்.ஜெயபால் கூறுகையில், “நூற்பாலைகள் கழிவுப் பஞ்சு விலையைத் தர்க்க மற்ற முறையில் உயர்த்தி வரும் நிலையில், கடந்த 2 மாதங்களில் 20 வெப்ட் ரக நூலின் விலை கிலோவுக்கு 8 ரூபாய் குறைந்தது. உற் பத்தி நிறுத்தம் மற்றும் விசை த்தறிகளின் தேவையால், கடந்த எட்டு நாட்களில் நூல்  விலை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. நூல் விலை படிப்படியாக மீண்டு வருவதால், கையிருப்பில் உள்ள பஞ்சைக் கொண்டு ஆலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன” என அவர் கூறினார்.