பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு குட்கா கடத்திய 3 பேர் கைது
விழுப்புரம், டிச. 31- பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்குக் காரில் கடத்தி வரப்பட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த போலீ சார், இது தொடர்பாக 3 பேரைக் கைது செய்த னர். விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நட மாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டக் காவல்துறை பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் செல்வநாயகம், உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் தலைமையிலான குழுவினர், தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனை செய்ததில், அதில் மூட்டை மூட்டையாகக் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்ட றியப்பட்டது. இதையடுத்து காரில் இருந்தவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில், குட்கா பொருட்களைப் பெங்களூ ரிலிருந்து புதுச்சேரிக்குக் கடத்திச் செல்வது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் வாகூடா வட்டம், நயாஜான்புறாவைச் சேர்ந்த மனோகர் சிங் (25), விழுப்புரம் மருதூர் எம்.ஆர்.கே தெருவைச் சேர்ந்த அகமது அலி (43), விழுப்புரம் கே.கே ரோடு, ரஹீம் லே அவுட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் (26) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 405 கிலோ எடை கொண்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் அருகே முட்டை ஏற்றி வந்த டெம்போ கவிழ்ந்து விபத்து
விழுப்புரம், டிச. 31- விழுப்புரம் அருகே முட்டை ஏற்றி வந்த மினி டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆயிரக்கணக்கான முட்டைகள் சாலையில் உடைந்து ஆறாக ஓடியது. கெடார் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான மினி டெம்போவை ரமேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இவர்கள் நாமக்கல்லில் இருந்து வரும் முட்டைகளைச் சேகரித்து விழுப்புரம் சுற்றுவட்டாரக் கடைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை காலை முட்டைகளை ஏற்றிக்கொண்டு செஞ்சி சாலை வழியாகச் சென்றபோது, அயினம்பாளையம் மேம்பாலத்தின் அருகே எதிரே வந்த வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரெனப் பிரேக் போட்டார். இதில் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ சாலையில் கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த சுமார் 20 ஆயிரம் முட்டைகளும் உடைந்து வீணாகின. இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.