கோவிட் 19 தொற்றை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு மக்கள் அதிக அளவில் வருவதை தவிர்க்கும் பொருட்டு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறது பாடசாலையில் உள்ள சரஸ்வதி மருத்துவமனை.
தொலைபேசி மூலம் நோய் குறித்த விவரங்களை கூறினால், அதற்குரிய மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அருகில் உள்ள மருந்து கடையிலிருந்து அவற்றை வாங்கி பயனடையலாம். அவசர சேவைகள் தவிர்த்து மற்ற நோயாளிகளின் வசதிக்காக இந்த தொலைபேசி வாயிலான (Tele Consultation) வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சேவை தேவைப் படுவோர் 9500667722, 9486568219 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.