புதுதில்லி:
தலைநகர் தில்லியில் இஸ்லாமியர் களை குறிவைத்து, இந்துத்துவா மத வெறியர்கள் நடத்திய வன்முறையில் 38 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், வன்முறைக் கும்பல்சூழ்ந்து கொண்டதாகவும், தங்களைக்காப்பாற்றுமாறு, தில்லி காவல்துறை யை, பொதுமக்கள் சுமார் 11 ஆயிரத்து500-க்கும் மேற்பட்ட முறை தொலைபேசியில் அழைத்திருப்பது தெரியவந்துள்ளது.
தில்லியின் வடகிழக்கு பகுதி யில் ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியவன்முறை 3 நாட்களாக நீடித்தது.இதில், 3-வது நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் தில்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அதிகபட்சமாக 7ஆயிரத்து 500 அழைப்புகள் உதவிகேட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமையன்று 700 என்றஎண்ணிக்கையில் வந்த இந்த அழைப்புக்கள், திங்கட்கிழமையன்று 3 ஆயிரத்து500 ஆக உயர்ந்ததாகவும், அதைத்தொட ர்ந்து செவ்வாயன்று அது 7 ஆயிரத்து 500 ஆனதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், என்டிடிவி- ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.