மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மாநகராட்சி மேயர் ஆய்வு
நாகர்கோவில், அக்.2- நாகர்கோவில் மாநக ராட்சி 24வது வார்டுக் குட்பட்ட செம்மாங்குடி சாலை மற்றும் ஜோசப் கான்வென்ட் பள்ளி சாலை யில் மழைநீர் வடிகால் ஓடை களை சீரமைத்து அதன் மேல் நடைபாதை அமைப் பது தொடர்பாக மேயர் ரெ.மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணாவுடன் கள ஆய்வி னை மேற்கொண்டார். உடன் மண்டல தலைவர் ஜவஹர் மாமன்ற உறுப்பி னர் ரோசிட்டா, உதவி செயற்பொறியாளர் ரகு ராமன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.