நெய்வேலியில் மாதர் சங்கம் புத்தாண்டு கொண்டாட்டம்
கடலூர், டிச. 31- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் (டிச. 30) இரவு, “இரவைக் கைப்பற்றுவோம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதில் கேக் வெட்டியும், கும்மியடித்தும், பாடல்கள் பாடியும் உற்சாகமாகப் புத்தாண்டை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாதர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் வி. மேரி, மாவட்டத் தலைவர் பி. மாதவி, நெய்வேலி நகரச் செயலாளர் வி. சத்தியவாணி, பொருளாளர் ஏ. சின்னம்மா, பகுதி தலைவர் எலிசபெத் ராணி, செயலாளர் என். தனலட்சுமி, பொருளாளர் புஷ்பா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
