தியாகிகள் அஞ்சான்-நாகூரான் நினைவு தினம்
தூத்துக்குடி, ஜன.21- 1982 ஆம் ஆண்டு ஜனவரி -19 இல் நடைபெற்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தின் போது அப்போதைய எம்.ஜி.ஆர்.தலைமையிலான அதிமுக அரசின் காவல்துறை கண் மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் திரு மெய்ஞானம் கிராமத்தை சேர்ந்த தியாகிகள் அஞ் சான்,நாகூரான் ஆகிய இருவரும் வீரமரண மடைந்தனர். தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலை யம் முன்பு சிஐடியு, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா நடை பெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், பொருளாளர் எஸ். அப்பாதுரை, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பா.புவிராஜ். மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
