tamilnadu

img

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சந்தை மதிப்பு கடும் சரிவு திவால் நிலையை நோக்கி ஐபிஎல் அமித் ஷா மகன் வெளியேறியதும் ரூ.21,684 கோடி இழப்பு

கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சந்தை மதிப்பு கடும் சரிவு  திவால் நிலையை நோக்கி ஐபிஎல் அமித் ஷா மகன் வெளியேறியதும் ரூ.21,684 கோடி இழப்பு


புதுதில்லி மோடி பிரதமர் ஆன பின்பு ஆர்எஸ்எஸ் ஆலோசனைப் படியே நாட்டின் பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது கார்ப்பரேட் தொழிலதி பர்கள் மற்றும் சாமியார்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசாங்கம் மானியம் மற்றும் ஒப்பந்தங்களை வாரி இறைத்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள் ளது. ஒவ்வொரு துறையும் அடிமேல் அடி வாங்கி வருகிறது. ஐபிஎல் இந்நிலையில், மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் விளையாட்டுத் துறையும் திவால் நிலையை நோக்கி பயணித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக ளவில் அதிகளவு பணம் கொழிக் கும் கிரிக்கெட் தொடராக இருப்பது ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) ஆகும். இந்த விளையாட்டில் பங் கேற்க உலகில் உள்ள அனைத்து  வீரர்களும் ஆர்வமாக இருப்பார் கள். காரணம் அதிரடி ஆட்டம், ரசிகர்களின் வரவேற்பு, சர்வதேச அளவிலான பயிற்சி அனுபவம், பணம் என அனைத்தும் ஒரே இடத் தில் கிடைப்பதால் ஐபிஎல் தொடர் பிரசித்தி பெற்ற உள்ளூர் தொடராக உள்ளது. இத்தகைய சூழலில் பெரும் வசதிபடைத்த இந்த ஐபி எல் கிரிக்கெட் தொடர் தற்போது திவால் நிலையை நோக்கிப் பயணித்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளில் மேட்ச்  பிக்சிங் (சூதாட்டம்) ஊழல், கொரோ னா மற்றும் பொருளாதார மந்த நிலை போன்ற பல சவால்களைச் சந்தித்த போதும் ஐபிஎல்-லின் சந்தை மதிப்பு தொடர்ந்து செழித்து வளர்ந்தது. ஆனால், 2025ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல்-லின் சந்தை மதிப்பில் வரலாறு காணாத அளவிற்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது.  முன்னணி சந்தை மதிப்பு மதிப்பீட்டு நிறுவனமான “பிராண்ட் பைனான்ஸ்”வெளியிட்டுள்ள அறிக்கையில்,  2024இல் ஐபிஎல்-லின் சந்தை மதிப்பு ரூ.1,08,420 கோடியாக (12 பில்லியன் டாலர்) இருந்தது. ஆனால் அடுத்த ஒரே ஆண்டில் ரூ.86,736 கோடியாக (9.6 பில்லியன் டாலர்) சரிந்துள் ளது. இது 20% வீழ்ச்சி ஆகும். அதா வது ரூ. 21,684 கோடி அளவிற்கு ஐபிஎல்-லின் சந்தை மதிப்பு கடு மையாகச் சரிந்துள்ளது. குறிப்பாக 10 ஐபிஎல் அணிகளில் 9 அணி களின் சந்தை மதிப்பும் உருக்கு லைந்துள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே சிறிய அளவில் (2%) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மற்ற அணி களில் ராஜஸ்தான் ராயல்ஸ் 35  சதவீதமும், சன் ரைசர்ஸ் ஹைதரா பாத் 34 சதவீதமும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 33 சதவீதமும், தில்லி கேப்பிடல்ஸ் 26 சதவீத மும், சென்னை சூப்பர் கிங்ஸ்  24 சதவீதமும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 சதவீதமும், மும்பை இந்தியன்ஸ் 9 சதவீதமும், பஞ்சாப் கிங்ஸ் 3 சதவீதமும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 2 சதவீதமும் கடும் சரிவைக் கண்டுள்ளன. யார் காரணம்? ட்ரீம் 11 (Dream 11), மை 11  சர்க்கிள் (My 11 Circle) போன்ற ரியல் மணி கேமிங் (ஆன்லைன் சூதாட்டம்)  பிராண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தான் ஐபிஎல்  சந்தை மதிப்பின் சரிவிற்கு முக்கி யக் காரணம் எனக் கூறப்படு கிறது. ஆனால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுத் தடை யால் ரூ.1,500 கோடி முதல் ரூ.2,000 கோடி வரையிலான வருடாந்திர விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் செலவுகள் மட்டுமே  இழப்பை ஏற்படுத்தி யுள்ளது. அப்படி என்றால் மீதமுள்ள ரூ.19,000 கோடி இழப்புக்கு யார் காரணம்? என பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர். அமித் ஷா மகன் மீது சந்தேகம் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலாள ராக இருந்த ஜெய் ஷா (ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா மகன்) 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார். அதற்கு முன் பிசிசிஐ, ஐபிஎல் என அனைத்தும் ஜெய் ஷா கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் துறையில் இருந்து, ஐசிசி-க்கு சென்ற பின்பு தான் திவால் நிலையை நோக்கி ஐபிஎல்-லின் சந்தை மதிப்பு உருக்குலைந்துள்ளது. நாம் உலக கிரிக்கெட் அரங்கிற்கு செல்கிறோம் என ஐபிஎல் சந்தை மதிப்பில் கூட்டாளிகளோடு கை வைத்து சென்று விட்டாரா? என்று  சந்தேகம் கிளம்பியுள்ளது.