தஞ்சாவூர்,நவ.20- மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி யில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப் பட்டினம் அருகே சின்னமனை பகுதி யைச் சேர்ந்த முத்து. இவரது மகள் ரமணி (25). மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதே சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் குமார் (28) என்பவரும் ரமணியும் காத லித்து வந்துள்ளனர். சில மாதங் களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரை சந்தித்து பெண் கேட்டுள்ளனர். ஆனால், ரமணியின் தம்பியான சாரதி என்பவர், மதனின் பழக்க வழக்கம் சரியில்லை என ரமணி யின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால், ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு பெண் தர மறுத்து விட்டனர். மேலும், ரமணியும் மதன்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார் புதனன்று பள்ளிக்கு சென்று, ஓய்வறையில் இருந்த ரமணியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்துள்ளார். திடீ ரென்று மறைத்து வைத்திருந்த மீன் வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு ரமணியின் கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டு தப்பியோட முயன்றார். ரமணியின் அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் மதன்குமாரை விரட்டிப் பிடித்தனர். இந்நிலையில், பள்ளியில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலை வில் மாவட்ட ஆட்சியர் வருகைக் காக நின்றுக்கொண்டு இருந்த சேது பாவாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதன்குமாரை பிடித்தனர். ஆசிரியை ரமணியை ஆம்பு லன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவ ரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனை செய்யப்பட்டது.
அமைச்சர் ஆறுதல்
ஆசிரியை கொலை குறித்து தக வலறிந்த பேராவூரணி தி.மு.க., எம். எல்.ஏ., அசோக்குமார் ஆசிரியர் களையும், மாணவர்களையும் சந்தித்து பேசினார். ரமணியின் பெற் றோருக்கு ஆறுதல் கூறினார். தொட ர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தி னார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மாலையில் வந்து உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் ஆசிரியை கொலைச் சம்பவத்தை கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை அளிப்ப தாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு உரிய தண்ட னை பெற்றுத் தர வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள் ளார்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செய லாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இக்கொடூரச் சம்பவத்தில் ஈடு பட்ட குற்றவாளிக்கு சட்டப்படி உச்ச பட்சத் தண்டனை வழங்கிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் ஆசிரியர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இச்சம்பவத்தால் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், மிகப்பெரிய அச்ச உணர்வும் ஏற்பட்டுள்ளது. இனிமேலும் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் போராட்ட ங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.