tamilnadu

img

மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் 24 மையங்களில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். கழகங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுப்பதுடன், மறைமுகமாக தனியார்மயம், ஒப்பந்தமுறை நியமனத்தைக் கைவிட வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வுக்கால பலன் வழங்க வேண்டும். 10 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாரிசு வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.22) மாநிலம் முழுவதும் 24 மையங்களில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், “அரசின் ஏமாற்று நடவடிக்கையை கண்டித்து விரைவில் வேலை நிறுத்தத்தை நோக்கி செல்வோம்” என்று தெரிவித்துள்ளார்.