states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ எம்.பி., சந்தோஷ் குமார்

அனைத்து வகையான சட்டவிரோத குடியேற்றங்களும் தடுக்கப்பட வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது என்ற பெயரில், இங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்கள் எந்தவித பாகுபாட்டிற்கும் உட்படுத்தப்படக் கூடாது. 

திரிணாமுல் எம்.பி., மகுவா மொய்த்ரா

கருப்பு நிறம் தொடர்பாக முக்கிய கருத்துக்களை தெரிவித்த கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரனை நாடு பெருமை கொள்கிறது. தோல் நிறம் குறித்து கருத்து தெரிவிக்கும் நபர்களுக்கும், பாலின சமத்துவத்திற்கு எதிராகப் பேசுபவர்களுக்கு இந்த நாட்டில் எந்த இடமும் இல்லை.

அரசியல் விமர்சகர் யோகேந்திர யாதவ்

மற்ற மொழிகளைவிட உயர்வானது என்ற அந்தஸ்தை உணர்த்த முயலும் இந்தி, எல்லாவற்றையும் விட தனக்கு மரியாதை தர வேண்டும் என எதிர்பார்க்கும் இந்தி, வகுப்பு வாதத்தைத் தூண்டும் கருவியாகவே இருக்கும். இந்திமொழி நாட்டில் பண்பாட்டுப் பிளவை  அதிகரித்து, தேசிய ஒற்றுமையைச் சீர்குலைக்கும்

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி

விமர்சனங்கள், விவாதங்களே ஜனநாயகத்தின் மிக முக்கியமான பகுதி ஆகும். ஆனால் ஒன்றிய அரசாங்கம் எந்த விமர்சனத்தையும் கேட்க விரும்பவில்லை. அதனால் தான் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஏதாவது பேச முயற்சிக்கும்போது மைக் அணைக்கப்படுகிறது. நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பில் இருந்தும் எதிர்க்கட்சி புறக்கணிக்கப்படுகின்றனர்.