நீட் தேர்வில் தொடர் தோல்வி மாணவி தற்கொலை
திருவண்ணாமலை, மார்ச் 30- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வ ராஜ் -தேவி தம்பதி. இவர்களின் மகள் தேவதர்ஷினி ( 22). செல்வ ராஜ் குடும்பத்தினர் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதி யில் வசித்து வருகின்றனர். தேவதர்ஷினி நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு சென்று பயின்றுள்ளார். கடந்த இருமுறை நீட் தேர்வு எழுதி வெற்றி பெறாத நிலையில், மூன்றாவது முறை யாக தேவதர்ஷினி மீண்டும் நீட் தேர்வு எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவு குறித்து மன உளைச்சலில் இருந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலை யில், தேவதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர், சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் தேவதர்ஷினியின் உடல் சொந்த ஊரான வந்தவாசி அடுத்த ராயனந்தல் கிராமத்திற்கு எடுத்துச் வரப்பட்டது. தேவதர்ஷினியின் உடலைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள், ஊர் மக்கள் கதறி அழுதனர்.