tamilnadu

img

சிபிஎம் மாநாடு இன்று எழுச்சித் துவக்கம்

சிபிஎம் மாநாடு இன்று எழுச்சித் துவக்கம்

தியாகிகள் நினைவுச் சுடர்கள் மதுரையில் சங்கமித்தன

இந்திய உழைப்பாளி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நகரில் (தமுக்கம் மைதானம்) இன்று எழுச்சியுடன் துவங்குகிறது.  இதனையொட்டி தியாகிகள் நினைவுச்சுடர்கள் செவ்வாயன்று மதுரையில் சங்கமித்தன. மாநாட்டின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ள வரலாற்று கண்காட்சியை மூத்த இதழியலாளர் என்.ராம், புத்தகக் கண்காட்சியை மூத்த தலைவர் வே.பரமேசுவரன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.  கொடியேற்றம் இந்நிலையில் மாநாட்டின் துவக்க மாக, புதன்கிழமை (ஏப். 2) காலை 8 மணிக்கு, தோழர் புத்ததேவ் பட்டாச் சார்யா நுழைவு வாயில் முன்பு கட்சி யின் மூத்தத் தலைவர் பிமன் பாசு செங்கொடியை ஏற்றி வைக்கிறார். முன்னதாக நாகை மாவட்டம் வெண்மணியில் இருந்து வெண் மணி தியாகிகள் நினைவாக கொண்டு வரப்பட்ட செங்கொடியை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி வழங்க, கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே. பத்மநாதன் பெற்றுக் கொள்கிறார்.  தியாகிகளுக்கு அஞ்சலி அதைத்தொடர்ந்து தியாகி களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. மாநாட்டின் துவக்கமாக, ஷேக் மஸ்தான் ஒருங்கிணைப்பில், நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் மல்லாரி இசை நிகழ்ச்சியும், பாம்பம்பாடி ஜமா குழுவினரின் பெரியமேளம் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. பொது மாநாடு - வாழ்த்துரை காலை 10.30 மணிக்கு, தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் நினைவரங்கில் பொது மாநாடு துவங்குகிறது. இந்நிகழ்வுக்கு கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமை வகிக்கி றார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவரும் மத்தியக்குழு உறுப்பின ருமான கே. பாலகிருஷ்ணன் வரவேற்  புரை ஆற்றுகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் துவக்க உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியச் செய லாளர் து. ராஜா, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (எம்.எல்) விடுதலை பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசுகின்றனர். வரவேற்புக்குழு செயலாளர் சு. வெங்கடேசன் நன்றி கூறுகிறார். பிரதிநிதிகள் மாநாடு பொது மாநாட்டு நிறைவைத் தொடர்ந்து, பிற்பகலில் பிரதிநிதி கள் மாநாடு துவங்குகிறது. ஏப்ரல்  6-ஆம் தேதி முற்பகல் வரை பிரதி நிதிகள் மாநாடு நடைபெறுகிறது. இதனிடையே, நாள் தோறும் (ஏப்ரல் 2 முதல் 5 வரை) மாலை 5 மணிக்கு தோழர் கே.பி. ஜானகியம்மாள் நினைவு மேடையில் (தமுக்கம் திறந்தவெளி கலையரங்கம்) கலைநிகழ்வுகள் - கருத்தரங்கம் நடை பெறுகிறது. அதன்படி, புதனன்று (ஏப்ரல் 2) மாலை 5 மணிக்கு, பாப்பம்பாடி ஜமா பெரியமேளம், திண்டுக்கல் சக்தி குழுவினரின் போர்ப்பறை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், எம். சசிகுமார் ஆகியோர் உரைநிகழ்த்துகின்றனர். தியாகிகள் நினைவுக்  கொடி - சுடர்கள் சங்கமம் அகில இந்திய மாநாட்டை யொட்டி, தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து எடுத்துவரப்பட்ட செங்கொடி மற்றும் நினைவுச்சுடர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மாலை, தோழர் பி. ராமமூர்த்தி நினைவு வளாகத்தை (தமுக்கம் மைதானம்) வந்தடைந்தன.  அப்போது, அங்கு குழுமியிருந்த தலைவர்களும்- மாநாட்டுப் பிரதிநிதிகளும்  உணர்ச்சி பொங்க  வரவேற்பு அளித்தனர். இதனைத்  தொடர்ந்து தோழர் ம. சிங்கார வேலர் நினைவுச் சுடரை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.  பாலபாரதி வழங்க, மூத்த தலைவர் எம். கருப்பு ராஜா பெற்றுக் கொண்டார். சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச் சுடரை மாநிலக்  குழு உறுப்பினர் பி. டில்லிபாபு வழங்க, மூத்த தலைவர் என். அமிர்தம் பெற்றுக் கொண்டார். கோவை சின்னியம்பாளையம் தியாகி கள் நினைவுச் சுடரை மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன் வழங்க, மூத்த தலைவர் ஏ. லாசர் பெற்றுக் கொண்டார். மாணவத் தியாகிகள் சோமு - செம்பு நினைவுச் சுடரை குழுத் தலைவரும் மாநிலக் குழு உறுப்பினருமான கே.ஜி. பாஸ்கரன் வழங்க, மூத்த தலைவர்- பேராசிரியர் அருணன் பெற்றுக் கொண்டார். மதுரை தியாகிகள் நினைவுச் சுடரை மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் வழங்க, மூத்த தலைவர் என். சீனிவாசன் பெற்றுக் கொண்டார்.          வரலாற்று மற்றும் புத்தகக்  கண்காட்சிகள் திறப்பு சிபிஎம் அகில இந்திய மாநாட்டை யொட்டி, சிறப்புப் கண்காட்சிகள் செவ்வாயன்று மாலை பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் தலை வர்களின் பங்களிப்பையும், தமி ழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களையும் விளக்கும் வரலாற்றுக் கண்காட்சி மாநாடு நடைபெறும் தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கம்யூனிச இயக்க வரலாற்றில் பெண்களின் பங்கு குறித்தும், தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் நிறைய தகவல்கள் அடங்கிய  கண்காட்சிகளும் அமைக்கப் பட்டுள்ளன. மூத்த ஊடகவியலாளர் என்‌. ராம், இந்தக் கண்காட்சிகளைத் திறந்து வைத்தார். மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தீக்கதிர் நாளிதழின் மேனாள் ஆசிரியருமான வே. பரமேசுவரன் திறந்து வைத்தார்.  கங்கை கருங்குயில் குழுவின ரின் கலை நிகழ்ச்சிகளும், மக்கள் இசைப் பாடல்களும் இடம் பெற்றன.