கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி
கேரளாவில் ஒன்றாம் வகுப்பில் சேர வயது 6ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் 6 வயதில் தான் முறையான கல்விக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராவார்கள் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் தான் கல்வியில் முன்னேறிய பல நாடுகள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக நிர்ணயம் செய்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
பாஜக அரசு தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. குழுச் சார்பு சதி மற்றும் தவறான நிர்வாக மேலாண்மை இரண்டும் இணைந்து இந்திய வங்கித் துறையை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத்
குணால் கம்ரா இந்திய நாட்டின் குடிமகன், ஒரு கலைஞர், ஒரு நகைச்சுவையாளர், எழுத்தாளர். ஆனால் அவர் ஒரு தீவிரவாதி போன்று சித்தரிக்கப்படுகிறது. மும்பை காவல்துறை நடுநிலையானது. அதனால் குணால் கம்ராவுக்கு சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.
திமுக எம்.பி., கனிமொழி சோமு
கும்பமேளாவின் போது ரயில்வே சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை விவரங்கள்? ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? ஆகியவற்றை உள்ளடங்கிய தரவுகளை ரயில்வே அமைச்சகம் வெளியிட வேண்டும்.