“தங்களின் சித்தம் எங்களின் பாக்கியம்!”
அமெரிக்காவின் டமாகிளஸ் வாள் (Damocles sword) தலைக்கு மேல் தொங்கிக் கொண்டி ருக்கும் நிலையில், அதை எதிர்ப்பதற்குப் பதிலாக அமெரிக்காவிடம் மோடி அரசாங்கம் சரண டைந்து வருகிறது. அமெரிக்காவுடனான நல்ல உற வைப் பொருட்படுத்தாமல், ஏப்ரல் 2 முதல் இந்தியா பரஸ்பர வரிகளுக்கு உட்பட்ட நாடுகளின் பட்டியலில் இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளிப்படையாகக் கூறினார். இந்த சவாலை எதிர்கொள்வதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் கிட்டத் தட்ட 55 சதவீத அமெரிக்கப் பொருட்களின் மீதான வரி களைக் குறைக்கத் தயாராக உள்ளது. மேலும் இந்த செயல்பாட்டில் இந்திய நலன்களை தியாகம் செய்து கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம்.
அமெ.பொருள்களுக்கு வரிகுறைப்பு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு
டிரம்பை பகைத்துக் கொள்ள மிகவும் பயந்து, ஒன்றிய பட்ஜெட்டிலேயே, போர்பன் விஸ்கி, ஈதர்நெட் சுவிட்சுகள் மற்றும் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் போன்ற சில அமெரிக்க தயாரிப்புக ளுக்கான வரிகளைக் குறைப்பதாக மோடி அர சாங்கம் அறிவித்திருக்கிறது. மார்ச் 25 அன்று, நிதி யமைச்சர் 6 சதவீத டிஜிட்டல் வரியை ரத்து செய்ய அனுமதி கோரி நாடாளுமன்றத்தில் நிதிச் சட்டமுன்வடி வில் ஒரு திருத்தத்தை முன்மொழிந்து நிறைவேற்றியி ருக்கிறார். இது முதன்மையாக கூகிள் போன்ற அமெ ரிக்க மென்பொருள் நிறுவனங்களுக்கு பயனளித்தி டும். பல்வேறு பொருட்களின் மீதான வரிக் குறைப்பு களை “பகுத்தறிவு” என்று அமைச்சர் நியாயப்படுத்து கிறார். இருப்பினும், அத்தகைய வரிக் குறைப்பால் உள் நாட்டு உற்பத்தியாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார் கள் என்பது குறித்து எதுவும் கூறாமல் மவுனமாக இருந்துவிட்டார்.
அமெ.மூலதனம் சுரண்ட அகலத் திறக்கும் அரசு
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில முக்கியப் பொருட்களுக்கு மிகக் குறைந்த வரிகள் விதிக்கப்படுகின்றன என்பது குறிப்பி டத்தக்கது. உதாரணமாக, அமெரிக்க பெட்ரோலிய கச்சா எண்ணெய் டன்னுக்கு 1 ரூபாய் மட்டுமே வசூ லிக்கப்பட்டது. இதன் மதிப்பு அதிகமாக இருந்தபோதி லும், மிகக் குறைந்த வரி விதிக்கப்படும் இறக்குமதிக ளில் ஒன்றாக இது அமைந்தது. இதேபோல், நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போன்ற பிற முக்கிய அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு வெறும் 2.5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. விவ சாயப் பொருட்கள், பால் பொருட்கள் மற்றும் சில முக்கிய உற்பத்திப் பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்து, இந்தத் துறைகளை அமெரிக்க மூலதனம் சுரண்டுவ தற்குத் திறந்துவிடுவதையே அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்க வர்த்தகக் குழுவின் தற்போதைய நான்கு நாள் இந்தியப் பயணத்தின் முக்கிய நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையே ‘சமச்சீர்’ வர்த்தகத்தை உறுதி செய்வதாகும். சமச்சீர் வர்த்தகம் என்பதன் மூலம் அமெரிக்கா எதைக் குறிக்கிறது என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது, அமெரிக்கப் பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டு அவை இந்திய சந்தைகளில் தடையற்ற முறையில் கிடைக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோளாகும்.
அமெரிக்க சோளத்தையும் தலையில் கட்ட முயற்சி
மோடி அரசாங்கத்தின் பணிவான அணுகுமுறை, அமெரிக்காவை இந்தியாவிடமிருந்து மேலும் மேலும் சலுகைகளைக் கோரத் தூண்டியிருக்கிறது. அமெ ரிக்க வர்த்தகச் செயலாளர் சமீபத்தில், “நான் பிரதமர் மோடியிடம், உங்களிடம் 140 கோடி மக்கள் உள்ளனர். உங்கள் பொருளாதாரம் எவ்வளவு அற்புதமானது என்று எங்களிடம் பெருமை பேசுகிறீர்கள்... நீங்கள் ஏன் எங்கள் சோளத்தை வாங்கக்கூடாது?” என்று கேட்டி ருக்கிறார். இவ்வாறு அவர் கடுமையான முறையில் பேசி யுள்ளபோதிலும், இதற்கு எவ்விதத்திலும் பதில் கூறாது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து மோடி பீற்றிக்கொண்டுள்ளார். இவ்வாறு அவருடைய பேச்சு, வெறும் வாய்ச்சவடால் என்பது மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது.
இந்திய விவசாயிகளின் வயிற்றிலடிக்க இணக்கம்
சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் (ICRIER- Indian Council for Research on International Economic Relations) அறிக்கையின்படி, அமெரிக்காவிற்கும் இந்தியா விற்கும் இடையிலான வரி இடைவெளி விவசாயத் துறை யில் அதிகமாக உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வளர்ந்த நாடு களின் அதிக மானிய விவசாயத்திலிருந்து இந்திய விவ சாயத்தைப் பாதுகாக்க இது உதவி வந்துள்ளது. வரிக ளைக் குறைத்து, வெளிநாட்டு விவசாய நிறுவனங்க ளின் நுழைவை அனுமதித்து, இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடித்து, தங்கள் நாட்டு விவசாயிகளைக் கொழுக்க வைத்திட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இவ்வாறு நமது விவசாயத் துறையை அமெரிக்காவின் சுரண்டலுக்குத் திறந்து விட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு மோடி அரசாங்கம் இணங்கியிருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசாங்கம் நமது சந்தையை அமெரிக்க சோளம், சோயாபீன்ஸ், பருத்தி, அரிசி, பருப்பு வகை கள் மற்றும் பால் பொருட்களுக்குக் கூட திறந்துவிடத் தயாராகிவிட்டது. இது இந்திய விவசாயத்தை நெரித்து விடும். ஏனெனில் நமது விவசாயிகள் அதிக மானிய விலையில் கிடைக்கும் அமெரிக்க இறக்குமதிகளுடன் போட்டியிட முடியாது. அமெரிக்க பொருட்களுக்கான வரிகளைக் குறைப்பது இந்தியாவின் மருந்து மற்றும் ஆட்டோமொபைல் தொழில்களையும் மோசமாகப் பாதித்திடும்.
அதிக விலை என்றாலும் இறக்குமதிக்கு தயாராகிறது...
எந்தெந்தப் பொருட்களின் மீது வரிகள் குறைக்கப் படலாம் என்பதை அடையாளம் காண இந்திய தொழில்துறை நிறுவனங்களுடன் அரசாங்கம் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது. அமெரிக்கக் குழுவின் வருகையின் போது பெரும்பாலான வர்த்த கப் பிரச்சனைகளைத் தீர்க்க அரசாங்கம் விரும்புகிறது என்பது இப்பேச்சுவார்த்தைகளின்போது தெளிவுபடு த்தப்பட்டது. விலை அதிகமாக இருந்தாலும் கூட, இறக்கு மதி செய்யக்கூடிய அமெரிக்கப் பொருட்களை பரிந்து ரைக்குமாறு தொழில்துறை பிரதிநிதிகளிடம் கேட்கப் பட்டது. விலையுயர்ந்த அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம், அமெரிக்காவு டனான தற்போதைய வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க முடியும் என்று அரசாங்கம் கருதுகிறது. இந்த அணுகுமுறை அமெரிக்காவை திருப்திப்படுத்தக்கூடும் என்றாலும், சந்தையில் கிடைக்கும் மலிவான மற்றும் சிறந்த மாற்றுகளை இந்திய நுகர்வோர் அணுகுவதை இது மறுத்திடும்.
குறைந்தவிலை வெனிசுலா இறக்குமதி நிறுத்தம்...
மலிவான மாற்று எதுவும் எஞ்சியிருக்காமல், அனைத்து நாடுகளும் அமெரிக்க ஏற்றுமதியைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக, மார்ச் 24 அன்று, வெனி சுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு களுக்கு கூடுதலாக 25 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் முதல் பதவிக்காலத்தில், முந்தைய பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடி பணிந்து வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்கு மதியை நிறுத்தியது. அதன் குறைந்த விலை காரண மாக 2023 டிசம்பர் முதல் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை மீண்டும் தொடங்கியது. இப்போது, டிரம்பின் புதுப்பிக்கப்பட்ட அச்சுறுத்தல்க ளுக்கு அஞ்சி, அமெரிக்காவிலிருந்து அதிக பெட் ரோலிய கச்சா எண்ணெய் வாங்க அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா தொ டர்ந்து ஒரு மிரட்டலாகச் செயல்படும் அதே வேளையில், பாஜக அரசு அதன் கட்டளைகளுக்கெல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் சரணடைந்து வருகிறது. பாஜக அரசாங்கத்தின் இத்தகைய அடிபணிந்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மைக்கு முற்றிலும் மாறாக, கனடா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் கூட அமெரிக்காவை எதிர்த்து நிற்பதைக் காண்கிறோம். அமெரிக்கா எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை அதிகரித்தபோது, கனடா அமெரிக்க தயாரிப்புகள் மீது அதன் சொந்த வரிகளை விதித்து பதி லடி கொடுத்தது. மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அனைத்தும் அமெரிக்கா வின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, பரஸ்பர வரி களால் ஏற்படும் சவால்களைச் சந்திக்க தங்கள் பொரு ளாதாரங்களைத் தயார்ப்படுத்தி வருகின்றன. ஆனால் பாஜக-வின் மோடி அரசாங்கமோ அமெரிக்காவை கேள்வி எதுவும் கேட்காமல் அது கூறும் கட்டளைகள் அனைத்தையும் அடிபணிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்திலும், நமது விவசாயி கள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்திலும் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. அரசாங்கம் அமெரிக்கா விடம் சரணடைவதைத் தடுக்க பொதுமக்களின் கருத்து திரட்டப்பட வேண்டும். இந்திய மக்களின் நலன்கள் மிக முக்கியமானவை, அவை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கப்பட வேண்டும்.