காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய கல்வி கொள்கை இந்திய பொது கல்வி முறை மீதான படுகொலை. மேலும் அக்கல்வி கொள்கை அதிகாரக் குவிப்பு, மதவாத திணிப்பு மற்றும் தனியார்மயமாக்குவதை அடிப்படையாக கொண்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வர் தேஜஸ்வி
எங்கள் அரசாங்கம் அமைந்தால், பீகாரில் வெள்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என அமித் ஷா சொல்கிறார். பீகாரில் 20 ஆண்டுகளாக தலிபான் அரசா இருக்கிறது?
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்காமல், பொது மக்களின் பிரச்சனைகளை பேசும் எதிர்க்கட்சியின் குரல் நசுக்கப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே
ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்பது இலக்கண ரீதியாகவோ தர்க்கரீதியாகவோ அறிவற்றது. ஒரே ஆரோக்கியம் என்றால் என்ன?நரேந்திர மோடியின் மனதில் இருந்து வரும் பெரும்பாலான வார்த்தைகள் , கருத்துக்கள் சரியானது என கருதப்படுவது முட்டாள்தனமானது.