states

img

உத்கல் பல்கலை-இல் மாணவர் சடலமாக மீட்பு!

ஒரிசா,மார்ச்.30- உத்கல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் இன்று காலை முதுகலை மாணவரின் உடல் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் விடுதியின் மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மாணவரின் உடல் உடர்க்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்