சிஐடியு தலைவர் எஸ்.ஆர்.ரமேஷ் காலமானார்
கடலூர், மார்ச் 30- நெய்வேலி சிஐடியு பகுதி தலைவர் எஸ்.ஆர்.ரமேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. தோழர் எஸ்.ஆர்.ரமேஷ் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கங்களின் நெய்வேலி முன்னாள் நகர தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகியாகவும் செயல்பட்டார். பிறகு, சிஐடியு சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். பகுதி தலைவராகவும் பணியாற்றி வந்த அவருக்கு ஒரு மகன், மகன், ராஜேஸ்வரி என்ற மனைவியும் உள்ளனர். ரமேஷின் உடல் நெய்வேலி நகரம் வட்டம் 5 இல் உள்ள அவர் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், நெய்வேலி நகர செயலாளர் ஆர். பாலமுருகன், முன்னாள் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், முன்னாள் என்எல்சி சங்க தலைவர் வி.முத்துவேல், என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன், பொருளாளர் சீனிவாசன், நிர்வாகிகள் பழனிவேல், சாமுவேல், மணிமாறன், மணி ,ஆரோக்கியதாஸ், மற்றும் மாதர் சங்கத்தின் தலைவர்கள் மேரி, மாதவி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ரமேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு, நெய்வேலி இடுகாட்டில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மூத்த தோழர் எஸ்.சையது அமீர் காலமானார்
கடலூர், மார்ச் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.சையது அமீர் ( 71) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலமானார். அவரது உடலுக்கு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொழிற் ஸ்தாபகத் சங்கத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் தோழர் சி.கோவிந்தராஜனுடன் இணைந்து பணியாற்றிய மூத்த தோழர் எஸ்.சையது அமீர்.மறைந்த சையத் அமீர் கட்சியின் பண்ருட்டி வட்டச் செயலாளராகவும் நெல்லிக்குப்பம் நகர செயலாளர் பணியாற்றியவர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லிக்குப்பம் கொத்த பள்ளியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், பழ.வாஞ்சிநாதன், ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், பகுதிக் குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், பண்ருட்டி நகரச் செயலாளர் தேவராஜ், மூத்தத் தோழர் ஆர்.வி .சுப்பிரமணியன், பகுதிக் குழு உறுப்பினர் எஸ்.தர்மேந்திரன், கிளைச் செயலாளர் இன்பரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். தோழர் அமீருக்கு ரெஜினா பேகம் என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் இரண்டு மகளும் உள்ளனர். ரெஜினா பேகம் நெல்லிக்குப்பத்தில் மாதர் சங்க நிர்வாகியாகவும், சிபிஎம் கட்சியிலும் பணியாற்றி வருகிறார்.
மூத்த சிபிஎம் உறுப்பினர் மறைவு: சிபிஎம் இரங்கல்
விழுப்புரம், மார்ச் 30- முண்டியம்பாக்கத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் தண்டபாணி வயது 67. ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஜி.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.வீரமணி, வி.கிருஷ்ணராஜ், எஸ்.சித்ரா உட்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். தண்டபாணி மறைவு குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு: ஆர்.தண்டபாணி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாக திறம்பட செயல்பட்டார். அவருக்கு மனைவி கலாவதி, மகள் ஜோனா ஸ்ரீ உள்ளனர். கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அன்றாடம் கட்சி பணி செய்ய சொந்தமாக டூ வீலர் வாங்கி கட்சி கிளைச் செயலாளர்களை நேரில் சந்தித்து நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி, கட்சி பத்திரிகைகள் மற்றும் இயக்க நோட்டீசுகளை கொண்டு சென்று சேர்ப்பதில் தனி சிறப்பு வாய்ந்தவர். ஏழை,எளிய மக்களுக்காகவும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாக்கவும் ஏராளமான போராட்டங்களையும் முன்னின்று நடத்தி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் சிக்கினார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிறிது காலம் அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். ஆனால், அன்றாடம் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்திற்கு தொடர்பு கொள்வார். மாநில நிர்வாகிகள் விழுப்புரம் வரும்போதெல்லாம் உணவு சமைத்துக் கொண்டு வந்து அவரே பரிமாறுவார். அப்படிப்பட்ட தோழரின் மறைவு கட்சிக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கட்சியின் மாவட்டக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.