மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி (DA) உயர்கிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு, 50 விழுக்காட்டில் இருந்து 53 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை 2% உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55% ஆக உயர்கிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.