வங்கிகள் அடிக்கும் கொள்ளை
வங்கியில் கொள்ளை என்கிற செய்திகள் அவ்வப்போது வரும். ஆனால் இப்போது வங்கி களே இந்திய மக்களின் பணத்தை கொள்ளை யடிக்க ஒன்றிய பாஜக கூட்டணி அரசு வகை செய்து வருகிறது. ஏடிஎம் மூலம் 3 முறைக்கு பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.23 கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறி வித்துள்ளது.
வங்கிக் கணக்கு செயல்படாமல் இருந்தால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 முதல் ரூ.200 வரை அபராதம், வங்கி மாத அறிக்கை வழங்குவதற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டணம், எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்ப கால் ஆண்டுக்கு ரூ.20 மற்றும் ரூ.25 வசூல், வங்கிகளில் கடன் பெறு வதற்கான கட்டணமாக 1 முதல் 3 சதவீதம் வரை வசூல், வாங்கியக் கடனை முன்கூட்டியே அடைக்க விரும்பினால் முன் கட்டணம் நெப்ட் டிடி கட்டணங்கள் உயர்வு என பொது மக்களுக்கு அடுக்கடுக்கான சுமை சுமத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஏடிஎம் பரிவர்த்தனைக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவே செய்யப்படுவது கிட்டத்தட்ட கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களை பெருமளவு பாதிக்கும்.
2018ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை சேமிப்புக் கணக்கு மற்றும் ஜன்தன் கணக்கு களில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வில்லை என்று கூறி மக்களிடமிருந்து ரூ.43,500 கோடியை வங்கிகள் சுருட்டியுள்ளன.
மறுபுறத்தில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு ரூ.25லட்சம் வரை வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் மட்டும் ரூ.14.56லட்சம் கோடி கடனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வங்கி களில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் வெளி நாட்டிற்கு தப்பியோடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களில் ஒருவரைக் கூட ஒன்றிய அரசு இதுவரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வந்து விசாரித்து தண்டனை வழங்க வில்லை.
வாராக்கடன் தள்ளுபடி குறித்து கேட்டால் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்று வியாக்கியானம் செய்வார். ஆனால் சாதாரண மக்களின் வங்கிப் பயன்பாட்டிற்கு மட்டும் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படுகின்றன. மோடி அரசு இந்திய குடி மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு கரசேவை செய்வதி லேயே கவனமாக இருக்கிறது என்பதையே கார்ப்ப ரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி மக்களுக்கு மேலும் மேலும் சுமை என்பது காட்டுகிறது. தேர் தல் பத்திரம் மூலம் வசூலித்ததற்கு கார்ப்பரேட் முத லாளிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் மோடி அரசு வாக்களித்த மக்களுக்கு ஒரு போதும் நன்றியாக இருந்ததில்லை.