ஆர்எஸ்எஸ் ஆலமரமல்ல; ஆலகால விஷம்
இந்திய கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ் எஸ் அமைப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி புளகாங்கிதம் அடைந்து பேசியுள்ளார். ஆர்எஸ் எஸ் அமைப்பின் தலைமையகத்திற்கு சென்ற அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் பல துறைகளில் தன்னலமில்லா மல் சேவையாற்றி வருகின்றனர் என்று கூறி யுள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுக்கும் அமைப்பு ஆர்எஸ்எஸ். மனுஅநீதியின் அடிப்ப டையில்தான் இந்தியாவின் அரசியல் சட்டம் அமைய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அந்த அமைப்பு.
இன்னும் சொல்லப்போனால், மொழி வழி மாநிலங்கள் அமைவதை எதிர்த்தவர்கள் ஆர் எஸ்எஸ்காரர்கள். கூட்டாட்சி கோட்பாட்டை ஏற்காத அவர்கள் ஒன்றிய அளவில் அதிகார குவிப்பை முன்வைத்தவர்கள். மாநிலங்கள் என்கிற கட்டமைப்பே அவர்களுக்கு எட்டிக் காய். ஜனபாதம் என்ற அளவில் மாநிலங்கள் இருந்தால் போதும் அனைத்து அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களது நிலைபாடு.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஜனநாயகம் என்பது மருந்துக்குக் கூட இருக்காது. அதனுடைய செயல் பாடுகள் அனைத்தும் ரகசியமானவை. ஆணா திக்கத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், சாதி யத்தையும் நிலைநிறுத்த துடிப்பவர்கள், வர்ணாச் சிரம அடிப்படையில் இந்தியாவை மாற்ற முயல் பவர்கள் இப்போதுள்ள இந்தியா என்கிற அமைப் பையும் தாண்டி அகண்ட பாரதம் தான் எங்களது இலக்கு என்பார்கள்.
தேசப்பிதா மகாத்மா காந்தி படுகொலை செய் யப்பட்ட போதும், அவசர நிலைக் காலத்தின்போதும், பாபர்மசூதி இடிக்கப்பட்ட போதும் தடை செய்யப்பட்ட அமைப்பு அது. ஆர்எஸ்எஸ் அமைப்பினுடைய அரசியல் முகம்தான் பாஜக. பாஜக தவிர பல நூறு பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி வைத் துள்ள அவர்கள் விஷக் கிருமி போல பல்வேறு துறைகளில் ஊடுருவியுள்ளனர். இதைத்தான் பிரதமர் மோடி தன்னலமற்ற சேவையாற்றி வரு கின்றனர் என்று பூடகமாகக் கூறுகிறார்.
ஆர்எஸ்எஸ் முன் வைக்கும் கலாச்சார தேசியம் என்பது இந்தியாவின் பன்முகத்தன்மை யை, பல்வேறு மொழிகளை, பண்பாட்டை மறுக்கக் கூடிய ஒன்று.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே மதம் என ஒற்றைத்தன்மையை திணிக்க பாஜக கூட்டணி அரசு பல்வேறு முனை களில் முயல்கிறது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கு வதையே முழு நேரத் தொழிலாக கொண்ட அமைப்புதான் ஆர்எஸ்எஸ். வாஜ்பாய் துவங்கி மோடி வரை அக்மார்க் ஆர்எஸ்எஸ் தயாரிப்புகள் தான். ஆர்எஸ்எஸ் தலைவர்களின் விரல் அசை வுக்கு ஏற்பவே பாஜக பொம்மைகள் ஆடும். பிரதமர் மோடி கூறியுள்ளது போல ஆர்எஸ்எஸ் என்பது ஆலமரமல்ல, அடியோடு அகற்ற வேண்டிய விஷத்தன்மை கொண்ட முள் மரம்.