கோவை,மார்ச்.28- கோவையில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கொக்கைன், குஷ், MDMA பில்ஸ் உள்ளிட்ட பல்வேறு உயர்ரக போதைப்பொருட்கள் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கம், 12 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மணிகண்டன் (39), விநாயகம் (34), கிருஷ்ணகாந்த் (34), மகாவிஷ்ணு (28), ஆதர்ஸ் டால்ஸ்டாய் (24), ரிதேஷ் லம்பா (41) மற்றும் ரோகன் ஷெட்டி (30) ஆகிய 7 பேரில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜய் லட்சுமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.