states

img

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

கழிவுநீர்த் தொட்டி தூய்மைப் பணியில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

4 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கெடு

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்தல் குற்றம் என்று ஒன்றிய மற்றும் சில மாநில  அரசுகள் தெரிவித்தாலும், மறைமுகமாக மனிதர்களை கழிவுநீர்த் தொட்டிகளில் ஈடுபடுத்தப்படுவது இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில், தில்லி நீர் வாரியம், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது, உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையின்போது,”4 நகரங்களின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் போதுமானதாகவோ திருப்தியளிப்பதாகவோ இல்லை. அடுத்த முறை தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரமும் முறையாக இல்லையென்றால், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொள்ளும். குறிப்பாக கடந்த 3 மாதங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தொகையை 4 வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும்” என உத்தரவிட்டது.