tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தருமபுரி

, மார்ச் 27- பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளை ஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெருசாக வுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (29). லாரி ஓட்டு நரான இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜன.9 ஆம் தேதி யன்று 14 வயது பள்ளி மாணவியை தனது வீட்டிற்கு அழைத் துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்ததும் குழந்தைகள் நல அலுவலர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மாணவியின் பெற்றோா் அரூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சுரேஷ் மீது போலீ சார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த  வழக்கு விசாரணை தருமபுரி போக்சோ வழக்குகளை விசா ரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடி வுற்ற நிலையில், புதனன்று நீதிபதி சிவஞானம் வழங்கிய தீர்ப்பில், குற்றம் உறுதி செய்யப்பட்டதால் சுரேஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

ஆற்றுப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

காவிரி ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியை இணைக்கும் வகை யில், நாமக்கல் மாவட்டம், ஓடப்பள்ளி கிராமம், வெண்டி பாளையம் கதவணை நீர்மின் நிலையம் அருகே மேம்பா லம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் ஈரோடு - நாமக்கல்  மக்களின் பிரதான போக்குவரத்தாக உள்ளது. இந்நிலை யில், பாலத்தின் நடுவே ஒரு பகுதியில் சாலை மிகவும் சேத மடைந்து, நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் இவ்வழியே வரும் பொழுது விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும்,  பாலத்தின் கைப்பிடிகள் பழுதடைந்து எந்த நேரம் வேண்டு மானாலும் இடிந்து விடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் வெளியே செல்லும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் கத வனைப் பகுதி மேம்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

நுண்நிதி நிறுவன ஊழியர்களின் அட்டூழியம்: பெண்கள் அச்சம்!

திருப்பூர், மார்ச் 27 – தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியத்தில் நுண்நிதி நிறு வனத்தில் கடன் பெற்ற பெண்களை, அந்நிறுவன ஊழி யர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து மன உளைச் சல் ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குண்டடம் காவல் சரகத்திற்குட்பட்ட முத்தையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்துணவு ஆசிரியர் லீலாவதி, ஈஷா  நுண்நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவர் மாதத் திற்கு இருமுறை தவணை செலுத்த வேண்டும் என ஒப்பந் தம் செய்துள்ளார். ஆனால், அவரது கணவர் பிரிந்து சென்ற தால், ஒரு தவணை மட்டுமே செலுத்த முடியும் என லீலா வதி தெரிவித்துள்ளார். எனினும், நுண்நிதி நிறுவன ஊழி யர்கள் அதை ஏற்க மறுத்து, அவர் எங்கு சென்றாலும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் கூறுகையில், “குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் நுண்நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்ற பெண் களை ஊழியர்கள் கேவலப்படுத்துவதும், இழிவு படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே பேட்டை  காளிபாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்போது, பெண்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து துரத்துவது, கேவ லமாக பேசுவது போன்ற செயல்களில் ஊழியர்கள் ஈடு பட்டு வருகின்றனர். எனவே, குண்டடம் காவல் நிலை யத்தில் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என வலியுறுத்தினார்.

சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பச்சை ரோஜா மலர்கள் பூத் துக் குலுங்குகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் குன் னூர் சிம்ஸ் பூங்கா முக்கியமானது. இங்கு ஆண்டுதோறும் கோடை விழா நாட்களில் பழக் கண்காட்சி நடத்தப்படுகிறது. சீசன் இல்லாத நேரங்களிலும் நாள்தோறும் 500 முதல் 1000  வரை சுற்றுலாப் பயணிகள் இப்பூங்காவிற்கு வருகை தரு கின்றனர். இங்கு பல அரிய வகை மரங்கள் மற்றும் மலர்ச்  செடிகள் உள்ளன. வரும் மே மாதம் கோடை விழா நடைபெற உள்ளது. இதற் காக, சிம்ஸ் பூங்காவில் உள்ள நாற்றங்காலில் 1000க்கும்  மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக் கப்பட்டு வந்தன. அவற்றில் பல வண்ண ரோஜா மலர்களும்  அடங்கும். குறிப்பாக, பச்சை ரோஜா மலர்களும் நடவு செய் யப்பட்டன. தற்போது, இந்த பச்சை ரோஜா மலர்கள் பூக்கத்  தொடங்கி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.