பழங்குடியின முதியவர் சடலத்தை புதைக்க எதிர்ப்பு
சிபிஎம் தலையீட்டால் சமரசம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், கஸ்தம்பாடி ஊராட்சிக்குட்பட்ட புது காந்தி நகர் மற்றும் இலங்கை தமிழர் முகாம் அருகில் சங்கரய்யா நகர் பகுதி யில் பழங்குடியின மக்கள் வசித்து வரு கின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி வழங்கப்பட்டது. அந்த குடியிருப்பு பகுதி யில் சனிக்கிழமை அன்று (மார்ச் 29) ரவி (70) என்பவர் இறந்து விட்டார். ஞாயிறு அன்று (மார்ச் 30) , அந்த முதியவரின் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றனர். அப்போது, அந்த இடம் தாங்கள் வசிக்கும் பகுதியின் எல்லையில் வருவதால் அங்கு அடக்கம் செய்யக்கூடாது என சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்டக் குழு உறுப்பினர் இரா.சிவாஜி, வட்டச் செயலாளர் இரா.இரவிதாசன், கட்டு மான சங்க மாவட்டத் தலைவர் கே. நட ராஜன், நிர்வாகிகள் இராஜா, ரவி, கார்த்தி, ஆறு உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிறகு, உயி ரிழந்தவர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இதையடுத்து, மயான பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதைத் தொடர்ந்து, சங்கரய்யா நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான மயான வேறு இடத்தை தேர்வு செய்து, அடக்கம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்தனர்.