tamilnadu

img

மத்திகிரி அருகே ஓராண்டை கடந்தும் திறக்கப்படாத பள்ளிக் கட்டிடம்

மத்திகிரி அருகே  ஓராண்டை கடந்தும் திறக்கப்படாத பள்ளிக் கட்டிடம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி அருகே நா கொண்டபள்ளி ஊராட்சி கடையநல்லூரில் தமிழ், தெலுங்கு வழி ஆரம்பப் பள்ளி நீண்ட காலமாக பழைய சிறிய கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது.  இடம் பற்றாக்குறை காரணமாக ஆரம்பப் பள்ளி கட்டிடத்தை விரிவாக்கம் செய்வதற்காக ரூ. 30 லட்சத்தில் பள்ளியின் அருகிலேயே 2 வகுப்பறைகள் புதிதாக கட்டுவதற்கு 2021-2022 அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் தொடங்கி அனைத்து பணிகளும் முடிந்து ஓராண்டை கடந்து விட்டது.ஆனால், இதுவரைக்கும் வகுப்பறைகள் இரண்டும்  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் தேவராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் கே. சந்திரசேகர் இருவரும் பள்ளிக் கட்டிடத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த பகுதி முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கழிப்பறை வளாக பணிகளை தரமாக செய்ய வேண்டும். சுற்றுச் சுவரும் கட்டிப்  கொடுப்பதுடன் இரண்டு வகுப்பறைகளையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்”என்றனர்.