tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு  எதிராக 12-வது முறையாக தீர்மானம் பரந்தூர்

, மார்ச் 30-  காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல் படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார் பாக்கம், அக்கம்மா புரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகா தேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பசுமை வெளி விமான நிலை யம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து 978 நாளாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். மேலும் கிராம சபை கூட்டங்களில் விமான நிலை யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறை வேற்றி வருகின்றனர். இதுவரை 11 முறை எதிர்ப்பு தெரி வித்து தீர்மானங்களை நிறைவேற்றினர். இந்நிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய-மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் ஒருமனதாக 12-வது முறையாக தீர்மானத்தை நிறை வேற்றினர். உலகத் தண்ணீர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதி கம் உள்ள பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயத்தை பாதிக்கும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கொலைக்கு பழிவாங்க சதித்திட்டம் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்

புழல், மார்ச் 30- ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டை யில் கடந்த 26 ஆம் தேதி பார்த்திபன் என்பவர் வீட்டின் அருகே புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை ஆதம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பார்த்தி பன் (27), ராபின்சன் (23) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர். அதில், சோழவரம் அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் நாட்டு வெடி குண்டை கொடுத்து வைத்ததாக தெரிவித்தனர். இதைய டுத்து இருவரை சிறையில் அடைத்து பார்த்திபன் அளித்த தகவலின் பேரில் ஆதம்பாக்கம் தனிப்படை போலீ சார் ஆந்திராவில் பதுங்கி இருந்த வினித் (23), அவரது கூட்டாளி முருகன் (20) ஆகிய இருவரை கைது செய்த னர். அவர்களது வீடு அமைந்துள்ள சோழவரம் ஆத்தூர் அழைத்து வந்தனர். அங்கு இருவரும் மறைத்து வைத்தி ருந்த 9 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். விசார ணையில், கடந்தாண்டு சரித்திர பதிவேடு குற்றவாளியான தனது தம்பி தனுஷை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்த தாகவும், தக்க சமயம் பார்த்து தம்பி கொலைக்கு பழி தீர்க்க நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த தாகவும் வினித் கூறியுள்ளார். பிறகு வினித்தை ஆதம் பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சோழவரம் போலீசார் முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.

மூத்த தோழர்  எஸ்.சையது அமீர் காலமானார்

 கடலூர், மார்ச் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.சையது அமீர் ( 71) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) காலமானார். அவ ரது உடலுக்கு கட்சித் தலை வர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொழிற் ஸ்தாபகத் சங்கத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் தோழர் சி.கோவிந்தராஜனுடன் இணைந்து பணியாற்றிய  மூத்த தோழர் எஸ்.சையது அமீர்.மறைந்த சையத் அமீர் கட்சியின் பண்ருட்டி வட்டச் செயலாளராகவும் நெல்லிக்குப்பம் நகர செயலாளர் பணியாற்றிய வர்.  அவரது உடல்  பொது மக்கள் அஞ்சலிக்காக நெல்லிக்குப்பம் கொத்த பள்ளியில் உள்ள அவ ருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. சிபிஎம் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், பழ.வாஞ்சி நாதன், ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், பகுதிக் குழு செயலாளர் ப.ஸ்டீபன் ராஜ், பண்ருட்டி நகரச் செய லாளர் தேவராஜ், மூத்தத் தோழர் ஆர்.வி .சுப்பிர மணியன், பகுதிக் குழு உறுப்பினர்  எஸ்.தர்மேந்திரன், கிளைச் செயலாளர் இன்பரசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார். தோழர் அமீ ருக்கு ரெஜினா பேகம் என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் இரண்டு மகளும் உள்ளனர். ரெஜினா பேகம் நெல்லிக்குப்பத்தில் மாதர் சங்க நிர்வாகியாகவும், சிபிஎம் கட்சியிலும் பணி யாற்றி வருகிறார்.