states

img

ஓய்வூதியத் திட்ட சட்ட திருத்தத்திற்கு சிஐடியு கண்டனம்

ஓய்வூதியத் திட்ட சட்ட திருத்தத்திற்கு சிஐடியு கண்டனம்

ஓய்வூதியர்களிடையே வேறுபாட்டை உருவாக்கும் நிதிச் சட்ட முன் வடிவிற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்ட அறிக்கையில்,”இந்த சட்டம் பாரம்பரிய ஓய்வூதிய நடைமுறைகளை மீறி, ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கை ஆகும். குறிப்பாக ஓய்வூதியத் தேதிகளின் அடிப்படையில் ஓய்வூதியதாரர்களிடையே பாகுபாடு செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்குகிறது. 1972 ஜூன் 1 முதல் நடை முறைக்கு வரும் இச்சட்டம், பழைய, புதிய மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டங் களின் கீழ் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர் களையும் பாதிக்கும்.  நிதிச் சட்டமுன்வடிவை ரத்து செய்து, அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுக்கிறது. இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறு தியளிக்கிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.