மதுரை, மே 13- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை நகர் பகுதி களில் உள்ள ரேஷன் கடைகளில் மத் திய அரசு வழங்கும் இலவச அரிசி முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி, பாஸ்டின் நகர் பகுதியில் உள்ள கடைகள், ஜெய்ஹிந்த்புரம் 88-ஆவது வார்டு சோலைஅழகுபுரம் பகுதியில் உள்ள பசுமலை கூட்டுறவு பண்டகசாலை, நெசவாளர் கூட்டுறவு பண்டகசாலை, முனிச்சாலை 54- ஆவது வார்டில் உள்ள பாண்டியன் கூட்டுறவு சிறபங்காடி ஆகிய கடை களை ஆய்வு செய்தார். ஆய்வு செய்தபின் செய்தியாளர் களிடம் கூறியதாவது: “ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் உள் ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கி வருகிறது. முதல் சுற்றில் தமிழக அரசு வழங்கிய அரிசி யாரும் சாப்பிட முடி யாத அளவிற்கு இருந்தது, தொடர்ந்து எழுந்த புகார்களைத் தொடர்ந்து சில நாட்களாக அரிசி ரேஷன் கடைகளில் நல்ல வழங்கப்படு கிறது.
மத்திய அரசு தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசி நல்ல அரிசியாக உள்ளது. மாநில அரசு தொகுப்பிலி ருந்து வழங்கும் அரிசி பற்றாக்குறை யாக உள்ளது. கோதுமையும் வர வில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகிறார்கள். கோதுமை, அரிசி ஆகி யவற்றை போதுமான அளவிற்கு கடை களுக்கு வழங்கி அனைத்து மக்களுக் கும் வழங்கவேண்டும். இதில் முறை கேடு நடைபெறக்கூடாது என்றார். ஆய்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் இரா. விஜயராஜன், முனிச்சாலை பகுதிகுழு செயலாளர் ஜெ.லெனின், அரசரடி பகுதிச் செயலாளர் கு. கணே சன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.லெனின் மற்றும் பகுதி குழு உறுப்பினர்கள் திமுக பகுதி குழு நிர் வாகிகள் உடனிருந்தனர்.