tamilnadu

img

கொரோனா நிவாரணத்தில் முறைகேடு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

மதுரை, மே 16- ரேசன் கடைகள் மூலம் கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கு வதில் மிகப்பெரும் முறைகேடு நடந் துள்ளது.  முறைகேடுகள் ஆய்வில் உறு திப்படுத்தப்பட்டுள்ளன. ரேஷன் கடை ஊழலைத் தடுக்க தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடே சன் செய்தியாளர்களிடம் கூறினார்.  செய்தியாளர்களுக்கு சனிக் கிழமை அவர் அளித்த பேட்டி:- மதுரை மாவட்டத்தில் 12 ரேஷன் கடைகளை மாவட்ட வருவாய் அதி காரிகளுடன் இணைந்து ஆய்வு மேற் கொண்டதில் கொரோனா கால நிவா ரண பொருட்களை வழங்குவதில் அனைத்து வகையிலும் மிகப்பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடை களில் உள்ள மின்னணு இயந்திரத்தில் உள்ள பொருள் இருப்பு விபரமும் பதிவேட்டில் உள்ள இருப்பு விபர மும் முரண்பாடாக இருந்தது. 90 சத வீத மக்களுக்கு பத்து கிலோ அளவு அரிசி வழங்கிவிட்டு இருபது கிலோ அரிசி வழங்கியுள்ளதாக குறுந்தக வல் அனுப்பப்பட்டுள்ளன. குறுஞ் செய்தி அனுப்புவதிலிருந்து ஊழல் தொடங்குகிறது. ரேஷன் கடை ஊழல் தொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடு வோம். முறைகேடு குறித்து முழுமை யான விசாரணை மேற்கொள் வேண்டும்.  ரேஷன் பொருட்கள் விநியோ கத்தை ஆய்வு செய்ய வட்டாட்சியர் தலைமையில் மூன்று வருவாய் ஆய்வாளர் நியமிக்க வேண்டும். ரேஷன் அரிசியில் கருப்பு அரிசி கலப் படம் செய்ய பல நூறு மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகக் கூறப் படுகிறது. ஒரு மூட்டை கருப்பு அரிசி கூட ரேஷன் கடைகளுக்கு வரக் கூடாது. 

புலம்பெயர் தொழிலாளர்கள்
மதுரை மாவட்டத்தில் வெளிமாநி லத் தொழிலாளர்கள் 12 முதல் 14 ஆயி ரம் பேர் வரை உள்ள நிலையில் இது வரை 200 பேர் மட்டுமே சொந்த ஊர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். வெளி மாநிலத். தொழிலாளர் களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி யை மாவட்ட நிர்வாகம் விரைவுப் படுத்த வேண்டும்.

15-ஆவது நிதிக்குழு நிதியில் முறைகேடு கூடாது
15-வது நிதிக்குழுவிலிருந்து மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றி யங்களுக்கு சுமார் ரூ.48 கோடி அனு மதி வழங்கப்பட்டுள்ளது. எந்தெந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பதை தேர்வு செய்து ஆன்லைனில் ஞாயிறன்று பதிவேற்றம் செய்ய வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்து வதாக உள்ளது. ஏற்கனவே ஊரா ட்சிப் பணிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. உடனடியாக இதை நிறுத்தவேண்டும் என்றார். முறையாக பணிகள் தேர்வு செய்யப்பட்ட பின்புன் ஆன்லைனில் பணிகள் குறித்த பதிவேற்றம் செய்ய வேண்டும். உடனடியாக பணிகள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு யார் பிறப்பித்திருந்தாலும் அது மிகப் பெரும் ஊழலுக்கும் முறைக்கேட் டிற்கும் வழிவகுக்கும் என்றார்.

தொடர்ந்து மக்களவை உறுப்பி னர் சு. வெங்கடேசன் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. லெனின் ஆகியோர் மாவட்ட ஆட்சி யர் டி. ஜி.வினய்யை நேரில் சந்தித்து வெள்ளியன்று ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் ஊழலை தடுக்கக் கோரி புகார் மனு அளித்த னர். மே -12 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை மதுரை நகர் பகுதிகளில் 12 ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது வழங்கப் படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை தரமற்றமுறையிலும் எடை குறை வாக வழங்கப்படுவதாகவும் பொது மக்கள் மக்களவை உறுப்பினரிடம் புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.