சென்னை, ஜன. 24 - தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்ச ருக்கு தாம் கோரிக்கை விடுப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 51 நிர்வாகிகள் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியிருப்பதாவது: தமிழக ஆளுநர் தேவையில்லாத வேலைகளை எல்லாம் செய்கிறார். நம்மை எதிர்த்து பேசிக்கொண்டே இருக்கிறாரே? திராவிடத்துக்கு எதி ராகவும், ஆரியத்துக்கு ஆதரவாகவும் பேசிக்கொண்டே இருக்கிறாரே? மதத்தை மையமாக வைத்து பேசிக் கொண்டே இருக்கிறாரே? என்று எல்லாம் வருத்தப்படுவது உண்டு. அவர் பேசட்டும். ஆளுநர் அப்படி பேச பேசத்தான் நமக்கு ஆதரவு அதிக மாகிறது. சிலர் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். இது வரை நாங்கள் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றி இருக்கி றோமா? நாங்கள் அப்படியொரு தீர்மானமே நிறை வேற்றவில்லை. அவர் இருக்க வேண்டும். அவர் இருந்தால்தான் திமுக இன்னும் வளர்கிறது. அடுத்த முறையும் ஆளுநர் சட்டப்பேரவைக்கு வர வேண்டும். ஆளு நர் உரையை நாங்கள் கொடுப்போம். அதை அவர் படிக்காமல் வெளியே போக வேண்டும். அதையும் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். நான் பிரதமருக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து ஆளுநரை மாற்றிவிடாதீர்கள். அவரே இருக்கட்டும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “1949-ல் கட்சி தொடங்கி, 57-இல் தான் முதல்முறையாக தேர்தல் களத்துக்கே திமுக வந்தது. ஆனால், இன்றைக்கு சில கட்சிகள் தொடங்கியவுடனே, ஆட்சிக்கு வருகிறோம். ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டிலே இருந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தான் அடுத்த முதல்வர், அடுத்த ஆட்சி எங்களுடையதுதான் என்று அனாதை யான நிலையில் சுற்றிக்கொண்டி ருப்பவர்கள் எல்லாம் அவ்வாறு பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர் யார்? எப்படிப்பட்டவர்? எந்தக் கட்சி? எந்தக்கட்சித் தலைவர்? என்பது பற்றியெல்லாம் நான் கூற விரும்ப வில்லை. எத்தனையோ கட்சிகள் உள்ளன. அக்கட்சிகளின் பெயர்களை கூறுகிறோம். ஆனால், இந்த கட்சியின் பெயரைச் சொல்ல மறுப்பதற்கு என்ன காரணம்? உண்மையாக அரசியல் கட்சியாகவும், மக்களுக்குப் பாடுபடும் காட்சியாகவும், தமிழர்களுக்காக பாடுபடக்கூடிய கட்சியாக இருந்தால் அக்கட்சியின் பெயரைக் கூறலாம். வேடமிட்டவர்களையும், நாடகம் நடத்துபவர்களையும் நான் அடை யாளம் காட்ட விரும்பவில்லை” என்றும் தெரிவித்தார்.