ஈரோடு, ஜன.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு ஈரோடு மாவட்டத்தில் வெள்ளியன்று அமைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந் திய மாநாடு ஏப்.2-6 இல் நடைபெறுகிறது. இதற்கான வர வேற்புக்குழு அமைப்புக் கூட்டம் மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 173 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. வரவேற் புக் குழுவின் தலைவராக கே.துரைராஜ், செயலாளராக ஆர். ரகுராமன், பொருளாளராக ஜி.பழனிசாமி ஆகியோர் தேர்ந் ்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக 25 பேரும், துணைச்செயலாளர்களாக 25 பேரும், வரவேற்புக்குழு உறுப்பினர்களாக 120 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.