கோவை, ஜன. 24- கோவை சங்கனூர் ஓடையில் 3 வீடுகள் இடிந்து விழுந்த விவகா ரத்தில், பாதிக்கப்பட்ட மூன்று குடும் பத்தினருக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கி அதற்கான ஆணைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கினர். கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சங்கனூர் ஓடையில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பணியின் போது ஓடை ஓரத்தில் இருந்த சுரேஷ், லட்சுமணன், தன லட்சுமி ஆகிய மூன்று பேரின் வீடு கள் இடிந்து ஓடையில் விழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக் கள் உரிய இழப்பீடு வழங்க வேண் டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட மூன்று குடும் பத்தினருக்கும் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியம் மூலம் சித்தா புதூர் மற்றும் கீரணத்தம் பகுதியில் 3 வீடுகள் ஒதுக்கப்பட்டது. அதற் கான ஆணையை வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.