மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
முன்னாள் ராணுவ தளபதி நரவானே புத்தகம் குறித்து விவாதிக்க பாஜக அரசுக்கு பயம். மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதம் நடப்பதை பாஜக அரசு விரும்பவில்லை. விவாதம் நடந்தால் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டிவரும் என்பதால் அஞ்சுகிறது. பிரதமரை யாராவது தாக்க திட்டமிட்டிருந்தால் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டியதுதானே?
சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள்
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் ஒருபோதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களின் மைக்குகள் எப்போதும் அணைக்கப்படுகின்றன. எத்தனை நாட்கள் இவ்வாறு நடக்கிறது என்று பார்ப்போம்.
திமுக எம்.பி., திருச்சி சிவா
இந்தியா - அமெரிக்க அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து அரசாங்கம் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். வணிக வரித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., சஞ்சய் ராவத்
இந்தியா அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கியதற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் தனது ஆதரவால்தான் பாஜக ஆட்சியில் இருப்பதாக ஆர்எஸ்எஸ் உரிமை கோருகிறது. ஆர்எஸ்எஸ் வழங்கும் அடிமைச் சாசனத்தை மட்டுமே மோடி பிரதமராகச் செயல்படுத்தி வருகிறார்.
