tamilnadu

img

முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்!

முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தை வலுப்படுத்துவோம்!  

உ.வாசுகி அழைப்பு நாகர்கோவில், டிச. 1 –  சமூக ஒடுக்குமுறை சித்தாந்தத் தையும், பொருளாதாரக் கட்ட மைப்பையும் கொண்ட ஏகாதிபத்தி யம் மனிதகுலத்தின் எதிரி என்றும், அதை ஒழிப்பது கம்யூனிஸ்ட்டு களின் முக்கியமான கடமை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் உ.வாசுகி, தக்கலையில் நடந்த கருத்தரங்கில் குறிப்பிட்டார்.  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நவம்பர் 29 அன்று மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி தலைமையில், மார்க்சிஸ்ட் சந்தா அளிப்பு - கருத்தரங்கில் உ.வாசுகி பேசியதன் சுருக்கம்:  மனிதகுல விடுதலைக்கான போராட்டம்  மனிதகுல விடுதலைக்காக நாம் போராடுகிறோம். ஆண்கள், பெண்கள், இதர பாலினத்தவர், பொருளாதாரத்தில் பின்தங்கி யோர், மத வழி சிறுபான்மையினர் உள்ளிட்ட இன ஒடுக்கலுக்கு உள்ளா கும் மக்கள் என அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை அமை வதே இந்த விடுதலையின் அடிப்படை. குடியிருப்பு, உணவு, உடை, நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, சம்பளம் என எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. இந்தியாவில் இத்தகைய மாற்ற த்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை நமது கட்சித் திட்டம் அழுத்தம் திருத்தமாக கூறுகிறது.  ஏகாதிபத்தியம் என்பது சமத்து வத்திற்கு எதிரானது. அது பிற நாடு களைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டுவது, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஓரங்கட்டு வது, சமூக நீதிக்கு எதிரானது, புலம் பெயர்ந்தோர் மற்றும் சிறுபான்மை யினரைப் பாரபட்சத்துடன் விலக்கி வைப்பது ஆகியவற்றைக் கொண்ட சித்தாந்தமும் பொருளாதாரக் கட்டமைப்பும் ஆகும்.  மோடி அரசின் நெருக்கமும் பாதிப்பும்  உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் செங்கொடியின் கீழ், ஏகா திபத்தியத்தின் தாக்குதல்களுக்கு எதிராக மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால், இந்தியா வில் உள்ள மோடி அரசு ஏகாதிபத்தி யத்துடன் நெருக்கமான உறவு வைத்துள்ளது.  அமெரிக்காவின் டிரம்ப் அர சாங்கத்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையை மோடி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது அனு மதிக்கப்பட்டால், பல துறைகளில் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, அமெரிக்காவின் மானியம் பெற்ற விளைபொருட்கள் மற்றும் பால் பொருட்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் போது, நமது விவசாயம், பால் உற்பத்தி, தோல் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.  இறையாண்மைக்கு அச்சுறுத்தல்  அமெரிக்காவுடன் பத்தாண்டு கள் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத் தில் இந்தியா கையெழுத்திட்டுள் ளது. தரைவழி, வான்வழி, கடல்வழி, விண்வெளி, இணையவழி என 5 வகையான கட்டுப்பாடுகளைக் கொண்ட இந்த ஒப்பந்தம் நமது இறையாண்மைக்கு எதிரானது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து எண் ணெய் இறக்குமதி செய்வதைக் கார ணம் காட்டி, இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்கா எடுத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது. பிரேசில் மீது வரி விதிப்பதற்கு அந்நாட்டில் இடது சாரிகள் ஆட்சி செய்வதைக் காரணம் கூறுவது எத்தனை கொடூரமானது!  மாற்று: சோசலிசமே!  ஏகாதிபத்தியத்தை எதிர்ப்ப தோடு, அதற்கான மாற்றையும் நாம் முன்வைக்க வேண்டும். அந்த மாற்று தான் சோசலிசம். முதலாளித்து வத்தின் உச்சகட்டம்தான் ஏகாதி பத்தியம் என வரையறுத்து, அதன் கடைசிக் கட்டம் வந்துவிட்டது, அடுத்தது சோசலிசம்தான் என்று கூறிய தோழர் லெனினின் ஆய்வு மார்க்சியத்தின் முத்திரை பதிக்கும் பங்களிப்பு.  வரும் ஜனவரி 21 லெனின் நினைவு தினத்தை ஒட்டி, அவரது முக்கியமான கருத்துக்கள் ‘மார்க் சிஸ்ட் தமிழ் மாத இதழில்’ இடம் பெற உள்ளன. முதலாளித்துவத்தை எதிர்க்கும் சித்தாந்தப் போராட்ட த்தை நடத்த, மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்களை அமைத்து விவாதிக்க வேண்டும்  இவ்வாறு உ.வாசுகி கேட்டுக்கொண்டார். கருத்தரங்கின் நிறைவாக, 876  மார்க்சிஸ்ட் சந்தாக்கள் உ.வாசுகி யிடம் வழங்கப்பட்டன. மேலும், 2013ஆம் ஆண்டு கட்சி அலுவலகத் திற்குள் புகுந்து பொய் வழக்கு புனையப்பட்டதில் பாதிக்கப்பட்டு, இப்போது குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டுள்ள தோழர் களுக்கும், வழக்கில் உதவிய வழக்க றிஞர்களுக்கும் அவர் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.