tamilnadu

img

‘சமூக அநீதி, மதவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்!’

‘சமூக அநீதி, மதவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்!’

சென்னை, ஜன.16 - தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் விருது கள் வழங்கப்பட்டு வருகின்றன.  அதன்படி திருவள்ளுவர் திருநாள் விருதுகளை வெள்ளிக்கிழமை (ஜன.16) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.  இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முத லில் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வள்ளு வர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். பின்னர் திருவள்ளுவர் விருது  பேராசிரியர் சத்தியவேல் முருகனாருக் கும், ஈ.வெ.ரா. விருது வழக்குரைஞர் அருள் மொழிக்கும், அம்பேத்கர் விருது விடு தலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.  சிந்தனைச் செல்வனுக்கும், அண்ணா துரை விருது அமைச்சர் துரைமுருகனுக் கும், காமராஜர் விருது எழுத்தாளர் இதயத்துல்லாவுக்கும் வழங்கப்பட்டன. மேலும் பாரதியார் விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் யுகபாரதிக்கும், திரு.வி.க.  விருது முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவுக்கும், கி.ஆ.பெ. விசுவ நாதம் விருது பேராசிரியர் செல்லப்பாவுக் கும், கலைஞர் கருணாநிதி விருது எழுத்தா ளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வா ளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட விடு தலை விரும்பி ஆகியோருக்கும் முதல மைச்சர் வழங்கி கவுரவித்தார். இலக்கிய மாமணி விருதுகளில் மரபு  தமிழ் விருது எழுத்தாளர் ராமலிங்கத்துக் கும், ஆய்வு தமிழ் விருது எழுத்தாளர்  சி.மகேந்திரனுக்கும், படைப்புத் தமிழ்  விருது எழுத்தாளர் நரேந்திரகுமாருக்கும்  வழங்கப்பட்டன. விருதாளர்களுக்கு ரூ.5  லட்சம் பரிசுத் தொகையும், ஒரு சவரன்  தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன.  மேலும் தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. நிவாரண நிதிக்கு... முன்னாள் தலைமைச் செயலர் இறை யன்பு மற்றும் எழுத்தாளர் இதயத்துல்லா இருவரும் தங்களுக்கு பரிசாக வழங்கப் பட்ட ரூ.5 லட்சம் பணத்தை முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். முதல்வரின் 4 வாக்குறுதிகள்  திருவள்ளுவர் தினத்தையொட்டி முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் நான்கு வாக்குறுதிகளை அறி வித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதி வில், “அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற் றல், ஊக்கமளித்தல் என வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின்  அடிநாதம்” என்று தெரிவித்துள்ளார். “அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”  என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய முதலமைச்சர், சமூக அநீதி மற்றும் மத வாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல், வறியோர் எளியோர் வாழ்வுயர  மனிதநேயத் திட்டங்கள், இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள், தொழில் வளர்ச்சிக்கும்  மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள் ஆகிய நான்கும் தமிழ் நாட்டில் தொடரும் என்பது இந்த திரு வள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி” என்று பதிவிட்டுள்ளார்.