tamilnadu

திமுக தலைமையிலான அணியின் மாபெரும் வெற்றியை உறுதி செய்வோம்!

திமுக தலைமையிலான அணியின் மாபெரும் வெற்றியை உறுதி செய்வோம்!

திருவனந்தபுரம், ஜன. 19- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி களைத் தோற்கடிக்க, திமுக தலை மையிலான கூட்டணியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போட்டியிடும் என்றும் இந்த அணியின் மாபெரும் வெற்றி யை உறுதி செய்ய கட்சி பாடுபடும் என்றும் கட்சியின் மத்தியக் குழு அறிவித்துள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழுக் கூட்டம் திரு வனந்தபுரத்தில் உள்ள இ.எம்.எஸ். அகாடமியில் ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற்றது. அதன்பின் வெளி யிடப்பட்ட அறிக்கை வருமாறு: தீவிர வறுமை ஒழிப்புக்கு பாராட்டு கேரள மாநிலத்தில் தீவிர வறு மையை ஒழித்ததற்காக இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்தை, மத்தியக் குழு பாராட்டி யது. முற்போக்கான அரசியல், பரவலாக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அணுகுமுறை யை அடிப்படையாகக் கொண்ட கேரள வளர்ச்சி மாதிரியின் செயல் திறனுக்கான ஒரு சான்றாகும் இந்த வெற்றி.  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங் களுக்கு நிதிப் பற்றாக்குறையை ஏற் படுத்திய ஒன்றிய அரசு இடை விடாத நிதிப் போரை நடத்திய போதிலும் அவையனைத்தையும் மீறி கேரளம் வெற்றியை ஈட்டியுள் ளது. ஒன்றிய அரசாங்கத்தால் எவ்வ ளவு தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு மக்களுக்கு நலன்விளைவிக்கும் திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்கிற இடது ஜனநாயக முன்னணியின் அரசியல் உறுதி இந்த சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள அரசின் துணிச்சலான அறிவிப்பு பாஜக தலைமையிலான ஒன் றிய அரசு வெளியிட்டுள்ள தொழிலா ளர் தொகுப்புச் சட்டங்களை பின்பற்றப்போவதில்லை என இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் தெளிவாகக் கூறியிருப்பதற்கும் மத்தியக்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அது அதன் தொழிலாளர் வர்க்க சார்புத்தன்மையை மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கிறது. கேரள மக்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வரலாறு படைத்திடும் விதத்தில் மூன்றாவது முறையாகவும் இடது ஜனநாயக முன்னணிக்கு வாக்களிப்பார்கள் என்று மத்தியக் குழு நம்பிக்கை தெரிவித்தது. 3-ஆவது முறையாக  எல்.டி.எப். அரசாங்கம் கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச் சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களுக்கான கட்சியின் தயாரிப்புகளை மத்தியக் குழு மதிப்பாய்வு செய்தது. கேரளத்தில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் சாதனை கள் குறித்துப் பிரச்சாரம் செய்து, இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்தை மீண்டும் தேர்ந்தெடுக்க கட்சி பாடுபடும். பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு, கேரளத் திற்கு உரிய நிதிப்பங்கீட்டை மறுப் பது, விதிக்கப்பட்ட நிதிக் கட்டுப் பாடுகள் மற்றும் கூட்டாட்சியின் மீதான ஒட்டுமொத்த தாக்குதலை அது அம்பலப்படுத்தும். நாடாளு மன்றத்தில் மிகப்பெரிய எதிர்க்கட்சி யாக கூட்டாட்சியின் மீதான இந்தத் தாக்குதலைத் திறம்பட எதிர் கொள்ள காங்கிரஸ் தவறியதையும் கட்சி அம்பலப்படுத்தும். குறிப்பாக கேரளத்தில், வகுப்புவாத ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ், சித் தாந்த ரீதியாகத் தயங்கிச் செய லற்று இருப்பது மக்கள் முன் அம்பலப்படுத்தப்படும். பாஜக கூட்டணியை தோற்கடிப்போம் மேற்கு வங்கத்தில், சமூகத்தை மதவெறியின் அடிப்படையில் பிளவு படுத்த முயற்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டை யும் தோற்கடிக்க கட்சி பாடுபடும். அவர்களுக்கு எதிராக செயல்படத் தயாராக உள்ள அனைத்து சக்தி களையும் அணிதிரட்டமுயற்சிக்கும். தமிழ்நாட்டில், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிக்க திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும். அசாமில் பாஜக எதிர்ப்புக் கட்சிகள் மற்றும் சக்திகளை அணி திரட்டவும், வெறித்தனமான மத வெறி பாஜக அரசாங்கத்தைத் தோற்கடிக்கவும் கட்சி பாடுபடும். புதுச்சேரியில், பாஜக கூட்டணி அரசாங்கத்தைத் தோற்கடிக்கவும் கட்சி பாடுபடும். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதம் பாஜக தலைமையிலான ஒன் றிய அரசு, மக்களின் நலன்களுக்கு ங்கு விளைவிக்கும் பல முக்கிய சட்டமுன்வடிவுகளை முறையாக விவாதிக்க அனுமதிக்காமல் நிறைவேற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரைப் பயன்படுத்தி யது. நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கும் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப்  பதிலாக ‘ஜி ராம் ஜி’ என்று புதிய சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. விதை சட்டமுன்வடிவு மற்றும் மின்சாரத் திருத்த சட்டமுன்வடிவு ஆகியவை தயாராக உள்ளன. காப்பீட்டில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டை யும், அணு மின் நிலையங்களில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவையும் அனுமதிக்கும் சட்டமுன்வடிவை ஒன்றிய அமைச்சரவை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றியுள்ளது. அணுசக்தி போன்ற மிக முக்கியமான துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திருப்பது பேரழிவை ஏற்படுத்திடும். எஸ்ஐஆர் திட்டமிட்ட அரசியல் சதிராட்டம் பாஜக வேண்டுமென்றே நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை பலவீனப்படுத்தி வருகிறது. இதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான ஆட்சி நிர்வாகத்தை நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கிறது. இவை நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அரித்து, எதேச்சதிகாரப் போக்கினை வலுப்படுத்திடும். சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) என்பது ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியால் தயாரிக்கப்பட்ட ஓர் அரசியல் திட்டமாகும். இது தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. குடியுரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு எதிராக, கட்சி விரி வாக பிரச்சாரம் மேற்கொள்ளும். அதே சமயத்தில் தகுதி யான எந்த வாக்காளரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் இருப்பதையும் கட்சி உறுதி செய்யும். அதேபோல், பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் உடந்தையுடன் போலி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதையும் விழிப்புடன் இருந்து உறுதி செய்யும். அதிகரிக்கும் தாக்குதல்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகிய இரு பிரிவினருக்கும் எதிரான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்கு இந்துத்துவா வகுப்புவாத அமைப்புகளே காரணம். பாஜக அரசாங்கங்க ளின் செயலற்ற தன்மை வேண்டுமென்றே அத்தகைய தாக்குதல்களை எளிதாக்கும் நோக்கம் கொண்டதாகும். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை மத்தியக் குழு கண்டிக்கிறது. இவை அனைத்தும் மதச்சார்பற்ற அரசை அகற்றி, அந்த இடத்தில் ஓர் இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஜம்மு - காஷ்மீருக்கு உடனடியாக மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரும் ஒரு சிறப்பு தீர்மானத்தை மத்தியக் குழு ஒருமனதாக நிறைவேற்றியது. ‘பிப். 12’ வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்! நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை எதிர்த்து மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்த பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்த அழைப்பிற்கு மத்தியக் குழு தனது முழு ஆதரவை வழங்கியது. மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்த பொது வேலை நிறுத்த அழைப்பை கட்சி தீவிரமாக ஆதரிக்கிறது. வேலை நிறுத்த நாளன்று தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக கட்சி ஊழியர்கள் செயல்படுவார்கள். ‘ஜி ராம் ஜி’ திட்டத்தை  எதிர்த்துப் பிரச்சாரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்  சட்டத்திற்குப் பதிலாக ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிராக ஒரு தீவிரமான பிரச்சாரத்தை கட்சி மேற்கொள்ளும். இந்தப் பிரச்சாரம் மகாத்மா காந்தியின் நினைவுநாளான ஜனவரி 30 அன்று தொடங்கி, பிப்ரவரி 5 வரை ஒரு வாரம் நடைபெறும். அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்! வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட முன்னெப்போதும் இல்லாத ஆக்கிரமிப்புச் செயலை மத்தியக்குழு கண்டித்தது. வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக கட்சி விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்வதுடன், பாஜக அல்லாத அனைத்துக் கட்சிகளையும் அணிதிரட்டி மாபெரும் போராட்டங்களையும் ஏற்பாடு செய்யும். பாலஸ்தீனம் மீதான  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பாலஸ்தீனம் மீது தொடரும் இஸ்ரேலிய ஆக்கிர மிப்பை மத்தியக் குழு கண்டித்தது. காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அமெரிக்கா இப்போது அறி வித்துள்ளது. முன்மொழியப்பட்ட இந்த வாரியம், காசாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அல்ல, மாறாக அந்த அழிவை லாபத்திற்காகச் சுரண்டுவதற்காக மட்டுமே. குறிப்பிடத்தக்க வகையில், பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இந்த அமைதித் திட்டம் தெளிவற்றதாகவே உள்ளது. வெனிசுலா மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுக ளின் மீதான இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஒரு அவமானகரமானதாகும். இது இந்தியா வின் சமரசப் போக்கையும், அதன் கொள்கைகள் அமெ ரிக்காவின் இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை கட்டளைகளுக்கும் அதன் மேலாதிக்கத் திட்டத்திற்கும் எவ்வாறு கட்டுப்பட்டிருக்கின்றன என்பதையும் காட்டு கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்தியக் குழு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்த ஒப்பந்தங்கள் நமது விவசாயத்தையும், தொழில்துறையையும் அழித்து, நமது மக்களின் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தும். பாஜக மற்றும் இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான தனது உறுதியான போராட்டத்தைத் தொடர்வது டன், கட்சியின் சுதந்திரமான பலத்தை வலுப்படுத்துவதற்கா கவும் ஒரே நேரத்தில் பாடுபடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுதி எடுத்துக் கொண்டது.