tamilnadu

img

இரவு 9 முதல் 9.30 மணி வரை ‘காசாவிற்காக மவுனம்’ காப்போம்!

இரவு 9 முதல் 9.30 மணி வரை  ‘காசாவிற்காக மவுனம்’ காப்போம்!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

புதுதில்லி, ஜூலை 7 - ‘காசாவிற்காக மவுனம்’ என்னும்  போராட்ட வடிவத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தம்மையும் இணைத்துக் கொள்வதாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை யில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூறியிருப்பதாவது: கார்ப்பரேட்டுகளின் தீய செயலை அம்பலப்படுத்துவோம்! இஸ்ரேல், காசா மீது மேற்கொண்டு வரும் அட்டூழியங்களைக் கண்டித்து, பாலஸ்தீனத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் அடையாளமாக, மொபைல் போன்கள் உட்பட அனைத்து டிஜிட்டல் வடிவ செயல்பாடுகளையும் இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரை நிறுத்தி வைத்திட உலக அளவில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. ‘காசாவிற்காக மவுனம்’ என்னும் பெயரிலான இந்த போராட்ட வடிவத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னையும் இணைத்துக் கொள்கிறது. ‘ஆக்கிரமிப்பு பொருளாதாரம் முதல் இனப்படுகொலை பொருளாதாரம் வரை’, என்னும் தலைப்பில் ஐக்கிய நாடு கள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையானது, காசா மீதான இஸ்ரே லின் தாக்குதலில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வாறு உடந்தையாக உள்ளன என்பதை விவரிக்கிறது. இந்த நிறுவனங்களின் இத்தகைய தீய பங்க ளிப்பு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தப் பட வேண்டும். மேலும் அவை இத்த கைய இழி நடவடிக்கைக்காக மக்கள் மத்தியில் பதில் கூற வேண்டும். கங்காணி முதலாளித்துவத்திற்கு எதிராக வேலைநிறுத்தம்! இவர்களின் மக்கள் விரோத நட வடிக்கைகளை மக்களுக்கு அம்பலப் படுத்திடும் விதத்தில், ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அரை மணி நேரம் நமது மொபைல் போன்களை முடக்கி, அதன் மூலம் ஒரு சிறிய ஆனால் சக்திவாய்ந்த டிஜிட்டல் முறையிலான எதிர்ப்பை மேற்கொண்டு, இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் நிறவெ றிக்கு நிதியளிக்கும் கங்காணி முதலா ளித்துவத்திற்கு எதிராக ஒரு வேலை நிறுத்தத்தை மேற்கொள்வோம். நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த  டிஜிட்டல் எதிர்ப்பில் தீவிரமாக பங்கேற்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்த போராட்டக் காலத்தில் எந்தவொரு சமூக  ஊடக தளத்திலும் பதிவிடுவது, விருப்ப த்தைத் தெரிவிப்பது அல்லது கருத்து தெரி விப்பதைத் தவிர்க்கும் விதமாக மொபைல் போன்களை அணைத்து விடவும். பாலஸ்தீன மக்களுடன்  சிபிஎம் இணைந்து நிற்கிறது! ‘காசாவிற்காக மவுனம்’ என்ற உலக ளாவிய அளவில் நடைபெறும் பிரச்சா ரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை இணைத்துக்கொள்வதன் மூலம்,  அது பாலஸ்தீன மக்களுடன் நிற்கிறது மற்றும் இஸ்ரேலால் கட்டவிழ்த்து விடப் பட்ட மிருகத்தனமான, இனப்படுகொலை தாக்குதலுக்கு எதிராக நிற்கிறது.  உலகளாவிய அளவில் நடைபெறும் இந்தக் கூட்டு மவுனம் என்பது, காசாவில் நடைபெற்றுவரும் அட்டூழியங்களுக்கு உடந்தையாக இருக்க மறுப்பதையும், போர்க்குற்றங்களுக்கு எதிரான குரல்கள் நசுக்கப்படாது என்பதற்கான சக்தி வாய்ந்த உறுதிப்பாடாகவும் அமைந்தி டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.  (ந.நி.)