tamilnadu

img

மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு தீர்மானம்

மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு தீர்மானம்

சிவகாசி, பிப்.3- தமிழ்நாடு அறிவியல் இயக்கத் த்தின் 23ஆவது மாநில மாநாடு ஜன., 30 முதல் பிப்., 1 வரை  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் இன்றைய அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த கால கட்டத்திலும், சமூகத்தின் பல பகுதி களில் மூடநம்பிக்கைகள், போலி அறி வியல், அறிவியலுக்குப் புறம்பான சடங்குகள் ஆகியவை பரவலாக நடை முறையில் உள்ளன. இதை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மாநாடு ஆழ்ந்த கவலையுடன் கவனிக்கிறது. மூடநம்பிக்கைகள் மனிதர்களை அச்சத்திலும் அறியாமையிலும் ஆழ்த்தி, அறி வியல் சிந்தனை, பகுத்தறிவு, மனித உரிமைகள், சமூக நீதி ஆகிய வற்றிற்கு பெரும் தடையாக அமை கின்றன. சில நேரங்களில் இம்மூட நம்பிக்கைகள் உயிரிழப்பு, பொரு ளாதார சுரண்டல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான வன்முறை போன்ற சமூக அவலங்களுக்கு காரணமாகின்றன என்பதும் வேதனைக்குரியது.  எனவே, அறிவியல் மனப் பான்மை, பகுத்தறிவு, மனிதநேய மதிப்புகளை வளர்த்தெடுக்கும் வகையில் தொடர்ச்சியான அறிவியல் பிரச்சாரங்களை முன்னெடுக்கவும், மூடநம்பிக்கைகளை அறிவியல் ஆதாரங்களுடன் எதிர்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி நிலையங்கள், ஊடகங்கள், சமூக அமைப்புகள் இணைந்து அறிவியலுக்கு எதி ரான தவறான நம்பிக்கைகளை முறி யடிக்கவும், அரசியல், நிர்வாக அமைப்புகள் அறிவியலுக்கு முரணான செயல்கள் மற்றும் ஊக்கங்களைத் தவிர்க்க வேண்டும். “மூடநம்பிக்கை ஒழிப்பு - அறிவியல் வளர்ச்சி -மனித முன்னேற்றம்” என்பதே சமூக விடுதலையின் பாதை என்பதை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   போதைப் பொருட்களுக்கு எதிராக  கடந்த 2021 ஜுன் முதல் 2025 ஜூலை வரையில், தமிழ்நாடு காவல்துறை சுமார் 107 டன் கஞ்சா, 3 லட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற் பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 2,412 கிலோ பிற போதைப் பொருட் களை பறிமுதல் செய்துள்ளது. ஜூலை 2025-இல் கல்லூரி மாண வர்களுக்கு விற்கப்படவிருந்த சுமார்  5,250 எண்ணிக்கையிலான கஞ்சா  சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.  இது போதைப்பொருள் விற்பனை குழுக்கள் வளர்ந்து வரு வதையும், சட்டத்தின் வழியே தடுக்க வேண்டிய அவசியத்தையும் பிரதிபலிக்கும் ஒரு எடுத்துக் காட்டாகும்.  கஞ்சா, அபின், கள்ளச்சாராயம் உள்ளிட்ட எந்தவொரு போதைப் பொருளும் தமிழ்நாட்டில் புழங்காதபடி கடுமையான நட வடிக்கைகள் தேவை. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தி யில் புழங்குவது அதிகரித்திருப்ப தாக வரும் தகவல்கள் அதிர்ச்சி யளிக்கிறது. மாணவர் நலன் இளை ஞர்களின் நலன்களை  கருத்தில் கொண்டு இதை முழுமையாய்  தடுக்க  வேண்டும்.      குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவு சிபிஎஸ்இ மூன்றாம் வகுப்பு முதல் எல்லா வகுப்புக்கும் செயற்கை நுண்ணறிவு பாடமாகக் கற்றுத்தரப்படும் என்று அறிவித்துள் ளது. தொடர்ந்து இப்பாடத் திட்டம் தயாரிப்பதற்கான குழு  ஒன்றையும் நியமித்துள்ளது.  இதனையடுத்து பல மாநி லங்கள்  இத்தகைய செயற்கை நுண்ண றிவுப் பாடத்திட்டம் உருவாக்கத் துவங்கியுள்ளன. பள்ளிக் கல்வி யில், அதுவும் குறிப்பாக தொடக்கக் கல்வியில், செயற்கை நுண்ணறிவுப் பாடம் கொண்டு வருவது ஆபத்தான முயற்சி.  பல நாடுகள் செயற்கை நுண்ண றிவும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நம் நாட்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சிறுவர் மனநிலையை பாதிக்கும் மற்றும் கற்றல் வழிமுறைகளில் பின்னடைவு தரும் என்று உல கெங்கும் பல கல்வியாளர்கள் கருது கின்றனர். கல்வியில் போதனா முறையை  (Teaching Methods) மையப் படுத்தியே இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவை தொடக்கக் கல்வி பாடத்திட்டமாக இணைக்கும்  ஒன்றிய அரசின் முடிவை  இம்மாநாடு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள்  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23ஆவது மாநில மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டன.   கருத்தரங்கு முதல் கலை நிகழ்வுகள் வரை “அறிவியலை அறிவோம்.. அறி வியலால் இணைவோம்.”. என்ற கருப் பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கருத்தரங்கு, சிறப்பு இணை அமர்வுகள், புத்தக வெளி யீடுகள், கலை நிகழ்வுகள், புதிய பொறுப்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.  மாநாட்டின் துவக்க விழாவிற்கு வரவேற்புக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு செயலாளர் சுந்தரராமன் வர வேற்புரையாற்றினார். துவக்கி வைத்து விஞ்ஞானி முனைவர் ராமா னுஜம்  பேசினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார்.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் முன் னாள் மதிப்புறுத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றி னார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ராஜ மாணிக்கம், துணைத் தலைவர் முனை வர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் சி.இராம லிங்கம்,  முன்னாள் தலைவர்களான  பேராசிரியர்கள் மோகனா,   தினகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பு இணை அமர்வுகள் மாநாட்டு கருப்பொருளின் சிறப்பு அமர்வில் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்,  பேராசிரியர் மணி, முனைவர் மாதவன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாட்டில் 6 சிறப்பு இணை அமர்வு கள் நடைபெற்றது. கல்வி, அறி வியல் பிரச்சாரம்,  சமம்,  சுகாதாரம்,  சூழலியல்,  அறிவியல் வெளியீடுகள் ஆகிய தலைப்புகளில் இன்றைய சூழல் குறித்த இணை அமர்வுகள் நடைபெற்றது.  இணை அமர்வுகளில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொறுப்பாளர் சுகந்தி, எழுத்தாளர் தீபலட்சுமி, ஊடகவியலாளர் எஸ்.பி. ராஜேந்திரன், பதிப்பாளர் ரத்தின விஜயன் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவ சங்கத்தின் டாக்டர் பகத்சிங், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலை வர்கள் பேராசிரியர் கிருஷ்ணசாமி, பேராசிரியர் ராஜமாணிக்கம், தமு எகச  துணைப் பொதுச் செயலாளர் லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.  முனைவர் கிருபா நந்தினியின்  பறவைகள் பலவிதம், டாக்டர் பருக் அப்துல்லாவின்  மருத்துவத்தில் மூடநம்பிக்கைகள்,   ஆயிஷா நட ராஜன் அவர்களின் நீங்களும் ஐன்ஸ்டீன் ஆகலாம் (ஆங்கில மொழியாக்கம்), பேராசிரியர் சாந்த குமாரியின் கல்வியில் ஜனநாயகம், முனைவர் திருநாவுக்கரசு, முனைவர் முருகன், மோசஸ் பிரபு ஆகி யோரின் கல்வி கட்டுரைகள், பேரா சிரியர் மோகனாவின் வானியல் வர லாறு உள்ளிட்ட புத்தகங்கள் வெளி யிடப்பட்டது. புதிய நிர்வாகிகள் இறுதியாக புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாநிலத் தலை வராக முனைவர் திருநாவுக்கரசு, பொதுச் செயலாளராக முகமது பாதுசா, மாநிலப் பொருளாளராக சுதாகர், துணைத் தலைவர்களாக அர விந்தன் (சென்னை), தாமோதரன் (கட லூர்), மகபுநிசா (கோவை), டாக்டர்  அனுரத்னா (திருவள்ளூர்), சுந்தர ராமன் (விருதுநகர்), சிவஸ்ரீ ரமேஷ்  (கன்னியாகுமரி), காந்தி (இராம நாதபுரம்), வீரமுத்து (புதுக் கோட்டை) ஆகியோரும், செய லாளர்களாக சங்கர் (நீலகிரி), ராம மூர்த்தி (திருப்பூர்), தீனதயாளன் (செங்கல்பட்டு), மலர்ச்செல்வி (மதுரை), ஜினிதா (கன்னியாகுமரி), மணிகண்டன் (திருச்சி), முனைவர் கிருபாநந்தினி (சென்னை), ஜெயசுதா  (திருப்பத்தூர்), தமிழரசி (விருது நகர்) ஆகியோர் உட்பட 20 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.  மாநில மாநாட்டிற்கான ஏற்பாடு களை விருதுநகர் மாவட்டத் தலை வர்கள் போஸ் பாண்டியன், பேரா சுரேஷ் தளியத், மாநில பொறுப்பாள ர்கள் பரமசிவம், பாண்டி யம்மாள், அமலராஜன், மு.ராதா,  மாவட்டப் பொறுப்பாளர்கள் சுந்தர ராமன், குருவையா, தமிழரசி, அருண் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.  - ந.நி.