tamilnadu

img

படிப்பினைகள் - அப்துல் சத்தார் குன்னூர்

படிப்பினைகள்

வேடன்குகன்  தந்த மீனை  ராமன் ஏற்றான்...!  கனகலிங்கம் தோளில்  பாரதியால்  பூணூல் ஏறியது...!  பெரியார் தந்த திருநீறை  திரு.வி.க  ஏற்றுக்கொண்டார்..!  ஆலயப் பிரேவசம்  நடத்தினார்  வைத்தியநாத ஐயர்...!  எல்லை காந்திக்கு இறைச்சி வாங்கி வர சொன்னார்  மகாத்மா காந்தி...! ….. அர்த்தமுள்ள இந்து மதம்  தந்த கண்ணதாசன்  இயேசு காவியம் எழுதினார்..!  கிறிஸ்தவ வலம்புரிஜான்  இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் நூல் தந்தார்..!  முஸ்லிமான மு.இஸ்மாயில் கம்ப ராமாயண  சொற்பொழிவாற்றினார்..! … ஆன்மிக விஷயத்தில்  அரசியல் கலக்காத வரை எல்லா நிகழ்வும் படிப்பினையே...!