கட்டாய ராணுவ சேவை: போருக்கு தயாராகிறதா ஜெர்மனி?
ஜெர்மனியில் 18 வயதடைந்த அனைவரும் ராணுவத்தில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசு அறி வித்துள்ளது. இது தன்னார்வ சேவை எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசு ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தற்காப்பு அல்ல போருக் கான நடவடிக்கை. கட்டாய ராணுவச் சேவை போருக்குத் தயாராவதைத் தான் காட்டுகிறது என அந்நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செவிம் டாக்டெலென் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு சூடான் நிலைமை பற்றி விவாதம்
சூடானின் எல்-பாஷர் நகரை கைப் பற்றிய துணை ராணுவம் இனப்படு கொலைகளையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துள்ளது. இத்தகைய கொடூரக் குற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பு ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியுள்ளது. மேலும் இந்த அமைப்பு நிபுணர்கள் குழு மூலம் எல்-பாஷர் நகர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட படுகொலைகள், பொதுமக்கள் மீதான படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் குறித்து விசாரிக்க உள்ளது.
வெனிசுலா : ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தும் அமெரிக்கா
அமெரிக்காவின் கடற்படை லத்தீன் அமெ ரிக்க கடல் பகுதிகளில் ராணுவ நடவடிக்கை யை தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் “ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர்” மூலம் இந்த தாக்குதல் தீவி ரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். வெனி சுலாவில் ஆட்சியை கவிழ்க்க இந்த நடவடிக்கை யை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இதுவரை அக்கடல் பகுதியில் 20 கப்பல்கள் மீது குண்டு வீசி 76 பேரை படுகொலை செய்துள்ளது அமெரிக்க ராணுவம்.
பாலஸ்தீன கைதிகளை கொலை செய்ய இஸ்ரேல் மசோதா நிறைவேற்றம்
இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு மரணதண்டனை கொடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களை கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கைதிகளு க்கு இந்த தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இஸ்ரேல் சிறையில் உள்ள பல பாலஸ்தீனக் கைதிகள் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு கொலை செய்யும் நடவடிக்கையே என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
லிபியக் கடல் பகுதியில் 71 புலம் பெயர்ந்தோர் மீட்பு
புலம்பெயர்ந்து படகில் பயணித்து வந்த 71 அகதிகளை லிபியா கடலோரக் காவல்படை யினர் மீட்டுள்ளனர். கடலோரக் காவல்படையின் தகவல் அடிப்படையில் அவர்களில் 70 பேர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்ட பின்னர், அவர்கள் வழக்கமான சட்ட நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
